Gold Price : வரலாற்றில் முதல் முறையாக ரூ.1,05,000-த்தை தாண்டிய தங்கம்.. உச்சத்தில் வெள்ளி!
Gold Price Crossed 105000 Rupees In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 12, 2026) வரலாற்றில் முதல் முறையாக ரூ,1,05,000-த்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 13 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 13, 2026) வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் (Silver) இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை
2026, ஜனவரி மாதம் தொடங்கியது முதலே தங்கம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. அமெரிக்கா – வெனிசுலா சிக்கல், அமெரிக்கா – ஈரான் சிக்கல் ஆகியவற்றின் காரணமாக புவிசார் பதற்றம் நிலவி வரும் நிலையில், தங்கம் கடந்த சில நாட்களாக தொடர் உயர்வில் உள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் ரூ.1,05,000-த்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி




மூன்று நாட்களில் ரூ.2,160 உயர்ந்த தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 04 ஜனவரி 2026 | ரூ.12,600 | ரூ.1,00,800 |
| 05 ஜனவரி 2026 | ரூ.12,760 | ரூ.1,02,080 |
| 06 ஜனவரி 2026 | ரூ.12,830 | ரூ.1,02,640 |
| 07 ஜனவரி 2026 | ரூ.12,800 | ரூ.1,02,400 |
| 08 ஜனவரி 2026 | ரூ.12,750 | ரூ.1,02,000 |
| 09 ஜனவரி 2026 | ரூ.12,800 | ரூ.1,02,400 |
| 10 ஜனவரி 2026 | ரூ.12,900 | ரூ.1,03,200 |
| 11 ஜனவரி 2026 | ரூ.12,900 | ரூ.1,03,200 |
| 12 ஜனவரி 2026 | ரூ.13,120 | ரூ.1,04,960 |
| 13 ஜனவரி 2026 | ரூ.12,170 | ரூ.1,05,360 |
இதுவரை தங்கம் ரூ.1,05,000-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று வரலாற்றில் முதல் முறையாக ரூ.1,05,000-த்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க : வெளியூரில் இருக்கும் நபர்கள் கவனத்திற்கு.. பொங்கல் பரிசுத் தொகை வாங்க இது கட்டாயம்!
ரூ.1,05,000-த்தை தாண்டிய தங்கம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292-க்கும், ஒரு கிலோ ரூ.2,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.