வெளியூரில் இருக்கும் நபர்கள் கவனத்திற்கு.. பொங்கல் பரிசுத் தொகை வாங்க இது கட்டாயம்!
Pongal Gift and Money | தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 உடன் கூடிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தொகுப்பை அட்டை தாரர்கள் எங்கு அட்டை வைத்துள்ளார்களோ அங்கு மட்டும் தான் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன், பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) நேற்று (ஜனவரி 08, 2026) தொடங்கி வைத்தார். இதற்காக குடும்ப அட்டை தாரர்களுக்கு முன்னதாகவே டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் எந்த தேதியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு டோக்கன்களின் அடிப்படையில் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரொக்க பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பொங்கல் பரிசுக்கு பொருந்தாது
பெரும்பாலான பொதுமக்கள் வேலை, மருத்துவம், கல்வி என பல தேவைகளுக்காக தங்களது சொந்த ஊர்களில் இருந்து வெளியேறி வேறு பகுதிகள் அல்லது வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலேயே பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் பொருட்களை வாங்க அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாமல் இருந்தது. ஆனால், தற்போது வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகைக்கு இது பொருந்தாது.
இதையும் படிங்க : வட்டியே இல்லாமல் தங்க நகைகளை அடகு வைக்க முடியுமா?.. இந்த அம்சத்தை கொஞ்சம் பாருங்கள்!
ரேஷன் கார்டு உள்ள இடத்தில் மட்டுமே பொங்கல் பரிசு
ரேஷன் பொருட்களை வழங்குவது போல் இல்லாமல், பொங்கல் பரிசு வழங்குவதில் சற்று கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது ரேஷன் அட்டை எந்த முகவரியில் உள்ளதோ, அந்த ரேஷன் கடையில் மட்டுமே பொருட்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையை பெற முடியும். ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது நேரில் சென்று, கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே சிறப்பு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படும்.
இதையும் படிங்க : இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!
எனவே வெளியூரில் இருக்கும் பொதுமக்கள் தங்களது பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரொக்க பணத்தை வாங்க தங்களது ரேஷன் கடைகளுக்கு செல்வதை திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.