தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா? நாணயமாக வாங்குவது சிறந்ததா?

Gold Investment Guide : இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும் நிலையில் தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா அல்லது நாணயமாக வாங்குவது சிறந்ததா என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா? நாணயமாக வாங்குவது சிறந்ததா?

மாதிரி புகைப்படம்

Published: 

04 Apr 2026 19:48 PM

 IST

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகலுக்கு தங்க நகைகள் வாங்குவது ஒரு மரபாக தொடர்ந்து வந்தாலும், சமீப காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலயே தங்கத்தின் விலைகள் உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது விலைகள் ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றன. குறிப்பாக ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்தன. இந்த நிலையில் தங்கத்தை நகையாக வாங்குவதா, அல்லது நாணயங்கள் மற்றும் பிஸ்கட் வடிவில் வாங்குவது நல்லதா என மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தை நகையாக வாங்குவது சிறந்ததா? நாணயமாக வாங்குவது சிறந்ததா?

தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒரே மதிப்பு தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவ்விரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. தங்க நகைகள் வாங்கும்போது அதன் வடிவமைப்பு செய்கூலி, மற்றும் பிராண்ட் மதிப்பு ஆகியவற்றுக்காக கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும். அதனால் அந்த நகையை நீங்கள் விற்கும்போது அந்த செய்கூலி மற்றும் பிராண்ட் பிரீமியம் திரும்ப கிடைக்காது. பொதுவாக அன்றைய நாளில் தங்கத்தின் மதிப்பு எவ்வளவோ அதற்கேற்ப தங்கம் வாங்கப்படும். சில நேரங்களில் தேய்மானம் என்ற பெயரில் தொகை குறைக்கப்படலாம். இதனால் தங்க நகைகளை விற்கும்போது அதன் மதிப்பு குறையும்.

இதையும் படிக்க : டிரெண்டாகும் ஒரு வார விதி – ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் – என்ன செய்ய வேண்டும்?

மேலும் தங்க நகைகளில் தூய்மையும் முக்கிய பிரச்னையாக இருக்கும். பொதுவாக 24 காரட் தங்கம் மிகவும் மென்மையானது என்பதால் தங்க நகைகள் தயாரிக்கும்போது செம்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்படும். இதனால் அதன் தூய்மை மதிப்பு 22 அல்லது 18 காரட்டாக குறையும். அதாவது நீங்கள் நகைகளாக வாங்கும்போது அது தூய்மையான தங்கமாக இருக்காது. அதனால் விற்கும்போது அதற்கேற்ப தொகை நீக்கப்படும்.

இதையும் படிக்க : வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம்.. இந்த திட்டங்களை நோட் பண்ணுங்க!

இதற்கு மாறாக தங்க நாணயங்கள் அல்லது பிஸ்கட் வடிவில் இருக்கும் தங்கம் பெரும்பாலும் 24 காரட் கொண்டதாக இருக்கும். அதாவது அந்த 99.9 சதவிகிதம் தூய்மையாக இருக்கும். இதற்கான செய்கூலி 1 முதல் 4 சதவிகிதம் வரை மட்டுமே இறுக்கும். நீங்கள் செலுத்தும் பணம் முழுவதும் தங்கத்தின் மதிப்புக்காக மட்டுமே இறுக்கும். மேலும், இவ்வகை தங்கத்தை விற்கும்போது சந்தை விலைக்கே எளிதாக விற்க மடியும். தூய்மை குறித்த சந்தேகங்களுக்கு இடம் இருக்காது. இதனால் முதலீட்டு காரணங்களுக்கு தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதனை நாணையங்களாகவோ அல்லது பிஸ்கட் வடிவிலோ வாங்குவது பாதுகாப்பானதா கருதப்படுகிறது.

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்