ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறலாம்.. இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள்!
Invest 5 lakhs in Different Ways to Get 8 Lakhs | நிதி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயமானதாக உள்ளது. இந்த நிலையில், ரூ.5 லட்சத்தை பிரித்து பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ரூ.8 லட்சம் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களுக்கு நிதி பாதுகாப்பு என்பது மிக முக்கிய அம்சமாக உள்ளது. காரணம், எப்போது வேண்டுமானாலும் நிதி தேவை மற்றும் சிக்கல் ஏற்படலாம். அப்போது தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள இந்த நிதி பாதுகாப்பு உதவும். நிதி பாதுகாப்பு என்றவுடன் பெரும்பாலான மக்கள் தங்களது சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்துவிடுகின்றனர். தங்களது பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அத்தகைய செயல்களை செய்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வது நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவாது. பணத்தை முதலீடு செய்வது மட்டுமே நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவும். இந்த நிலையில், ரூ.5 லட்சத்தை பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
40 சதவீதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யுங்கள்
நீங்கள் ரூ.5 லட்சம் பணம் வைத்திருந்தால் அதில் 40 சதவீத பணத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது ரூ.2 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில், 5 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.1,52,000 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.3,52,000 கிடைக்கும்.
இதையும் படிங்க : கடும் சரிவை சந்தித்த தங்கம்.. மேலும் விலை குறையுமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
20 சதவீதம் கடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்
பிறகு மீதமுள்ள பணத்தில் 20 சதவீதத்தை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அதாவது ரூ. 1 லட்சம் பணத்தை முதலீடு செய்யுங்கள். இந்த கடன் பத்திரங்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வட்டியாக மட்டுமே ரூ.61,000 கிடைக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மொத்தமாக ரூ.1,61,000 பெறலாம்.
இதையும் படிங்க : இந்த வங்கி பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
20 சதவீதம் தங்க முதலீடு
நீங்கள் ஏற்கனவே ரூ.3 லட்சம் பணத்தை முதலீடு செய்துவிட்ட நிலையில், மீதம் ரூ.2 லட்சம் பணம் இருக்கும். எனவே நீங்கள் 20 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது ரூ. 1 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் சராசரியாக 10 சதவீதம் லாபம் பெற முடியும். இந்த நிலையில், நீங்கள் ரூ.1 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஐந்த ஆண்டுகளில் உங்களுக்கு குறைந்தது ரூ.50,000 லாபம் கிடைக்கும்.
தேசிய சேமிப்பு பத்திரம்
இப்போது உங்களிடம் ரூ. 1 லட்சம் பணம் இருக்கும். இந்த பணத்தை நீங்கள் தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.77 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.44,000 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.1,44,000 கிடைக்கும்.
இவ்வாறு பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.5 லட்சம் பணத்தை ரூ.8 லட்சமாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.