லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!

EPFO Credits 3000 Rupees in Employees Accounts | ஒவ்வொரு மாதமும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் புதிய பயனர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதியதாக இணைக்கப்பட்ட நபர்களுக்கு இபிஎஃப்ஓ ரூ.3,000 அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைத்துள்ளது.

லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Dec 2025 11:58 AM

 IST

நாடு முழுவதும் உள்ள பல லட்சம் ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் ஊரியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) இரவோடு இரவாக ரூ.3,000 வரவு வைத்துள்ளது. முதல் வேளையில் புதிதாக பணியில் சேர்ந்த நபர்களுக்கு இந்த தொகையை இபிஎஃப்ஓ அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பணம் வரவு வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?, யார் யாருக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இணைக்கப்படும் புதிய உறுப்பினர்கள்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். புதியதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு இந்த இபிஎஃப்ஓவின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவர்களது மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மாதம் மாதம் வரவு வைக்கப்படும். இவ்வாறு பணியில் சேறும் அனைத்து புதிய ஊழியர்களுக்கும் அவர்களின் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு பணம் வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க : முதலீடும் செய்யனும், பணமும் வேணுமா?.. அப்போ இந்த திட்டம் தான் உங்களுக்கு சரியானதாக இருக்கும்!

தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் சார்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் புதிய பயனர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர் அமைச்சகம் அது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 8.5 லட்சம் புதிய உறுப்பினர்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இணைத்துள்ளது. புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க : ஆதார் கார்டு நகல்கள் ரத்து செய்யப்படும்.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!

இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் டிசம்பர் மாதத்தில் புதியதாக இணைந்துள்ள உறுப்பினர்களின் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000 செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த பணம் கடந்த சில நாட்களாகவே ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வௌக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 09, 2025) பல லட்சம் பயனர்களின் கணக்கில் வரவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?