EPFO 3.0: யுபிஐ முதல் ஏடிஎம் வரை – பிஎஃப் திட்டத்தில்10 முக்கிய மாற்றங்கள்

EPFO Key Changes: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 10 முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO 3.0: யுபிஐ முதல் ஏடிஎம் வரை - பிஎஃப் திட்டத்தில்10 முக்கிய மாற்றங்கள்

மாதிரி புகைப்படம்

Published: 

08 Apr 2026 19:46 PM

 IST

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக செயல்படும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தற்போது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளது. இதற்காக இபிஎஃப்ஓ 3.0 என்ற  புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் முறையில் பெறும் வசதிகளை வழங்கவிருக்கிறது. இந்த மாற்றம் நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ 3.0 என்றால் என்ன?

இபிஎஃப்ஓ 3.0 என்பது பழைய முறைகளை மாற்றி, வங்கி போன்ற நவீன முறையில் நடைமுறைக்கு வரும் மிகப்பெரிய அப்டேட்டாகும். இதன் மூலம் வைப்பு நிதி கணக்குகளை  வங்கி கணக்குகளைப் போல எளிதில் நிர்வகிக்க முடியும். மேலும் எந்த இபிஎஃப்ஓ அலுவலகத்திலும் உங்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும். முன்பு போல குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இதையும் படிக்க : ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. 5.25% ஆகவே தொடரும்.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

நடைமுறைக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்

  1. இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தில் மிகப்பெரிய மாற்றமாக ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் நேரடியாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பணம் பெறும் நேரத்தை மிக குறைக்கும்.
  2. முன்பு 13 வகைகளாக இருந்த பணம் எடுக்கும் விதி தற்போது 3 வகைகளாக சுருக்கப்பட்டுள்ளது. அதன்படி அவசிய தேவைகள், வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலைகள் ஆகிய 3 தேவைகளுக்கு பணம் எடுக்கலாம்.
  3. முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது ஒரே ஆண்டில் பணம் எடுக்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
  4. முன்பு ஊழியர்கள் செலுத்தும் பணம் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது நிறுவனம் செலுத்தும் தொகையையும் சேர்த்து பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  5. அதே போல பிஎஃப் தொகையின் 75 சதவிகிதத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.
  6. முன்பு போல அல்லாமல் எந்த ஆவணங்களும் இல்லாமலேயே பணம் பெற முடியும்.
  7. வேலை இழந்தால் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் தொகையில் இருந்து 75 சதவிகிதத்தை உடனடியாக பெற முடியும். மீதமுள்ள 25 சதவிகிதத்தை 12 மாதங்கள் கழித்து பெறலாம்.
  8. மேலும் 55 வயதில் ஓய்வு பெற்றால், உடல் ஊனமுற்றால், அல்லது நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் முழு பிஎஃப் தொகையையும் பெற முடியும்.
  9. பென்சன் தொகையில் இருந்து குறைந்தது 25 சதவிகிதத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
  10. மேலும் பென்சன் தொகையை முன்பு 2 மாதங்களில் பெற முடிந்த நிலையில் தற்போது 36 மாதங்கள் கழித்தே பெற முடியும்.

இதையும் படிக்க : கையில் ரூ.50,000 இருக்கா?.. உடனே முதலீடு செய்து இரு மடங்கு லாபம் பெறுங்கள்!

பழைய இபிஎஃப்ஓ முறையில் தாமதம், அதிக ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியிருந்தது, சரிபார்ப்புக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. இதனையடுத்து ஊழியர்களுக்கு தங்கள் பிஎஃப் தொகை கிடைக்க வழி வகை செய்வதற்காகவே இந்த இபிஎஃப்ஓ 3.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?