திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு!

DMDK Gets 10 Seats In DMK Alliance | திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Mar 2026 21:43 PM

 IST

சென்னை, மார்ச் 24 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) போட்டியிட திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்துக்கு (DMDK – Desiya Murpokku Dravida Kazhagam) 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலை திமுகவுடன் இணைந்து களம் காணும் தேமுதிக

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு என கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலை முதல் முறையாக தேமுதிக, திமுக உடன் இணைந்து களம் காண உள்ளது. திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தேமுதிக உடனான தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் உறுதி செய்வது தொடர்பான தொடர் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியில், 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு… திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. உத்தேச பட்டியலும் வெளியீடு!

திமுக கூட்டணியில் எந்த எந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்

திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒருசில கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • காங்கிரஸ் – 28 தொகுதிகள்
  • மதிமுக – 4 தொகுதிகள்
  • மமக – 2 தொகுதிகள்
  • ஐயூஎம்எல் – 2 தொகுதிகள்
  • கொமதேக – 2 தொகுதிகள்
  • கம்யூனிட்ஸ் – 5 தொகுதிகள்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5 தொகுதிகள்

மற்ற கட்சிகளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் திமுக தங்களை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி, திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Virugambakkam Constituency Election 2026: திமுக VS அதிமுக.. போக்குவரத்து நெரிசல் முதல் குடிநீர் பிரச்சனை வரை.. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு?
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி..
அடுத்தக்கட்ட பரப்புரை.. சென்னை, செங்கலபட்டு, காஞ்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி.. அட்டவணை வெளியீடு..
இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் – வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி இருக்கிறது.. விசிக தனித்து போட்டி – திருமாவளவன் அதிரடி
இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்