ஆதார் மட்டும் போதும்… 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை ஈஸியா வாங்கலாம் – எப்படி தெரியுமா?

LPG New Update : மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 5 கிலோ எடையுள்ள மினி எல்பிஜி சிலிண்டர்கள் அதிக அளவில் விநியோகம் செய்யும் வகையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆதார் மட்டும் இருந்தால் போது நம்மால் எளிதாக சிலிண்டர்களை பெற முடியும்.

ஆதார் மட்டும் போதும்... 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை ஈஸியா வாங்கலாம் - எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Apr 2026 17:55 PM

 IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு பெரிய பெரிய நிவாரணமாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 5 கிலோ எடையுள்ள மினி எல்பிஜி சிலிண்டர்கள் அதிக அளவில் விநியோகம் செய்யும் வகையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது. உலக அளவில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் விநியோக சிக்கல்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிலிண்டர்கள் உடனடியாக கிடைப்பதை உறதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு, 5 கிலோ இலவச வர்த்தக Free Trade LPG (FTL) சிலிண்டர்களின் தினசரி விநியோகத்தை 70 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் தற்போதுள்ளதை விட 2 மடங்கு இரட்டிப்பாக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாதக தகவல்கள்தெரிவிக்கின்றன. இந்த திட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு தேவையான மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – ஊதியம் எவ்வளவு உயரும்?

புதிய 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் இணைப்பை பெற என்ன செய்ய வேண்டும்?

புதிய 5 கிலோ எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு, ஆதார் கார்டு மட்டும் போதுமானது. மேலும் முகவரி சான்று அல்லது டெபாசிட் போன்ற எதுவும் தேவைப்படாது. மேலும், மிக குறைந்த ஆவணங்களுடன் உடனடி இணைப்பு கிடைக்கும். இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் உடனடியாக சிலிண்டர் பெற முடியும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சோட்டு சிலிண்டர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் எச்பி கேஸ் அப்பு, பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ் மினி என அந்தந்த நிறுவனங்களில் மினி எல்பிஜி சிலிண்டர்களை அந்தந்த நிறுவனங்களில் அலுவலகங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் போதுமான அளவில் எல்பிஜி இருப்பு உள்ளது.

இதையும் படிக்க  : இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!

இந்த திட்டம் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், புதிதாக ஒரு நகருக்கு குடியேறியவர்கள், பேச்சுலர் இளைஞர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் திட்டம், குறைந்த ஆவணங்களுடன் எளிதாக எரிவாயு கிடைக்க உதவும் ஒரு பெரிய மாற்றமாக இருக்கிறது. ஆதார் மட்டும் இருந்தால் புதிய நகரத்தில் சிலிண்டர் பெறலாம் என்பது பெரிய தாக்கத்தை பார்க்கப்படுகிறது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..