Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நகை பிரியர்களுக்கு ஷாக்.. ரூ.11,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா?

Chennai Gold Price October 06 : சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,060க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.880 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.88,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நகை பிரியர்களுக்கு ஷாக்.. ரூ.11,000-ஐ கடந்த  தங்கம் விலை..  ஒரு சவரன் இவ்வளவா?
தங்கம் விலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Oct 2025 10:15 AM IST

சென்னை, அக்டோபர் 06 : சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை (Chennai Gold Price)  ரூ.11,060க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.880 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.88,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், வரி விதிப்பு கொள்கை ஆகியவற்றை காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தால், அதில் முதலீடு செய்வது என்பது குறையவில்லை. தற்போது, பண்டிகை காலம் என்பதால், மக்கள் அதிக அளிவ்ல தங்க ஆபரணங்களை வாங்கி வருகின்றனர்.

ஓரிரு வாரங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால், தங்கத்தை மக்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயை எட்டக் கூடும். 2025 அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை சவரனுக்கு தங்கம் விலை ரூ.87,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,950க்கு விற்பனையானது. 2025 அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில், 2025 அக்டோபர் 06ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Also Read : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!

இன்றைய தங்கம், வெள்ளி  விலை நிலவரம்

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.11, 060க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.880 உயர்ந்து, ரூ.88,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று (அக்டோபர் 06) உயர்ந்துள்ளது.

Also Read : பண்டிகை காலத்தில் முறையாக தங்கம் வாங்குவது எப்படி?.. இந்த விஷயங்களை செக் பண்ணுங்க!

அதன்படி, சென்னையில் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று மேலும் உயர்ந்திருக்கிறது.  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.