Gold Price : 1979-க்கு பிறகு 2025-ல் உச்சம் கண்ட தங்கம் விலை.. காரணம் என்ன?
Gold Price Surged in 2025 After 1979 | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக விலை உயர்வை சந்தித்த ஆண்டாக 2025 உள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.87,000-த்தை விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தங்கம் விலை 2025-ல் இத்தகைய கடுமையான விலையேற்றத்தை கண்டுள்ளதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் உச்சம் தொட்ட தங்கம் விலை
2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளுமே தங்கம் விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. 2024 ஆம் ஆண்டை விடவும், 2025-ல் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 30 சதவீதம் விலை உயர்வை அடைந்தது. 2025 ஆம் ஆண்டு இன்னும் முடிவடைய மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தற்போதைய நிலவரத்தின் படியே தங்கம் விலை 45 சதவீதம் வரை உயர்வு அடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது 1979 ஆம் ஆண்டுக்கு தங்கம் அதிக விலை உயர்வை சந்தித்த ஆண்டாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!
1979-க்கு பிறகு 2025-ல் உச்சம் கண்ட தங்கம் விலை
தங்கம் விலை 1979 ஆம் ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதாவது அந்த ஆண்டில் மட்டும் தங்கம் 126 சதவீதம் விலை உயர்வை சந்தித்தது. இந்த நிலையில், சுமார் 46 ஆண்டுகள் கழித்து ஒரே ஆண்டில் தங்கம் அதிக விலை உயர்வை சந்தித்த ஆண்டாக 2025 பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் வீடு வாங்க போறீங்களா?.. அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்!
தங்கத்தின் அபார விலை உயர்வுக்கு காரணம் என்ன?
உலக அளவில் நிலவும் போர்களின் காரணமாக உலக வரத்தக சந்தை நிலையில்லாமல் உள்ளது. இத்தகைய சூழல்களில் உலல முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வர். அந்த வகையில் தற்போது உலக அளவில் போர்கள், பொருளாதார மந்தநிலை, அசாதாரன சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதும் முதலீட்டாளர்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடுன் செய்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.