மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. ஒப்புதல் வழங்கிய அரசு!
Dearness Allowance For Central Government Employees | மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படிக்கு 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி (DA – Dearness Hike) உயர்வுக்கு மத்திய அரசு (Central Government) ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2025, ஜூலை மாதத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் டிஏ
இந்தியாவில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், இரண்டாவது முறை ஜூலை மாதத்திலும் வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், 3 சதவீதம் இரண்டாவது அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!




3 சதவீதம் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுகிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை உயர்த்தப்படும் இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 1 கோடி அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் வீடு வாங்க போறீங்களா?.. அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்!
கடந்த முறை 2 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு
2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு மார்ச் மாதம் உயர்த்தியது. அப்போது அரசு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கிய நிலையில், 52 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மொத்த அகவிலைப்படி உயர்வு 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.