ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரிப்பு.. ஒரு சவரன் தங்கம் ரூ. 87,600க்கு விற்பனை..
Gold Rate: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 87,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது; கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ரூ. 2,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, அக்டோபர் 1, 2025: தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருவதால், தங்கத்தின் விலை ஏற்றம் நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. நமது கலாச்சாரத்தைப் பொருத்தவரையில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தங்கத்துக்கு தனி இடம் உண்டு. 2024ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியதும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சில நாள்களில் தற்காலிகமாக குறைந்தாலும், அது சிறிதளவு மட்டுமே; மீண்டும் புதிய உச்சத்தை எட்டுகிறது.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை:
அந்த வகையில், அக்டோபர் 1, 2025 என்ற இன்றைய காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 87,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீண்டும் விலை உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 87,600 ரூபாயாகவும், கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 10,950 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: மாற்றமில்லை.. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
தங்கம் விலை உயர்விற்கான சர்வதேச காரணங்கள்:
சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்களது மத்திய வங்கிகளில் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி சேமித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய மத்திய வங்கியும் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகிறது.
இதனை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளதால், வருங்காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை எட்டக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: EMI கட்டுறீங்களா? ஆர்பிஐ கொடுத்த அதிர்ச்சி.. ரெப்போ ரேட் விவரம் இதோ!
காலை மற்றும் மாலை விலை விவரம் (அக்டோபர் 1, 2025):
தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், அக்டோபர் 1, 2025 என்ற இன்றைய காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 10,890 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,880 க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 87,120 க்கும், 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 95,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலை நேரத்திலும் மீண்டும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 87,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது; கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ரூ. 2,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.