வெனிசுலாவை உலுக்கிய அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. கட்டிடங்கள் இடிந்து சேதம்..
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 22 கி.மீ. ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களும் நாட்டின் கரீபியக் கடற்கரை அருகே உள்ள மொரோன் பகுதியை மையமாகக் கொண்டு பதிவாகியுள்ளன.
ஜூன் 25, 2026: வெனிசுலா நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பல மாநிலங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வெனிசுலாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்:
Passengers panic and run for cover at Simón Bolívar International Airport in Maiquetía, Venezuela, as the terminal shakes and power flickers, resulting from a massive 7.5 magnitude earthquake off the coast of Caracas. pic.twitter.com/uWN4ZqFjOZ
— OSINTdefender (@sentdefender) June 24, 2026
நிலநடுக்கத்தால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. சில கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் மற்றும் செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 22 கி.மீ. ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களும் நாட்டின் கரீபியக் கடற்கரை அருகே உள்ள மொரோன் பகுதியை மையமாகக் கொண்டு பதிவாகியுள்ளன. விக்டர் க்ளார்க் தெரிவித்ததாவது, பால்கன் மாநிலத்தில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் கொலம்பியாவில் ஏற்பட்ட தாக்கம்:
Immense damage seen to buildings across Venezuela’s capital of Caracas, following what now appears to have been a “double-event” 7.2 and 7.5 magnitude earthquake back-to-back near the coast in Northern Venezuela, according to the U.S. Geological Survey (USGS). pic.twitter.com/XoG2jSJMf2
— OSINTdefender (@sentdefender) June 24, 2026
நிலநடுக்கத்தின் தாக்கம் வெனிசுலாவைத் தாண்டி பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. பிரேசிலின் அமேசான் பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி செய்யப்பட்டன. எனினும் கொலம்பியாவில் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் பதிவாகவில்லை.
இதற்கிடையில், மரியா கொரினா மச்சாடோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நாயிப் புக்கேலே ஆகியோர் வெனிசுலா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கடந்த நூற்றாண்டில் வெனிசுலாவை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.