‘நாடு கடத்துவோம்’ இந்தியர்களுக்கு அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை.. இந்த தவறை பண்ணாதீங்க!

US Visa : குடியேற்ற விதிகளில் அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா விசாவிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இந்தியர்களுக்கு விசா தொடர்பாக புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு கூட கடத்துவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

நாடு கடத்துவோம்  இந்தியர்களுக்கு அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை.. இந்த தவறை பண்ணாதீங்க!

அமெரிக்கா விசா

Updated On: 

12 Jul 2025 21:52 PM

டெல்லி, ஜூலை 12 : அமெரிக்க சட்டங்கள் மற்றும் குடியேற்ற விதிகளை பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் விசா (US Visa) ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கா தூதரகம் (US Embassy) எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியேற்ற விதிகளில் அமெரிக்கா தீவிரமாக இருக்கும் சூழலில், இந்தியவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், விசா வழங்குவதற்கும் சில கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்துள்ளார். சமீபத்தில் கூட, எச்1பி விசா விலையையும் டிரம்ப் உயர்த்தி இருந்தது இந்தியர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ரூ.21,000 அமெரிக்கா தனது விசா விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதரகம், ”விசா வழங்கப்பட்ட பிறகு சோதனை நிறுத்தப்படுவதில்லை. அமெரிக்கா விசா வைத்திருப்பவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் அமெரிக்க சட்டங்கள், குடியேற்ற விதிகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் விசாக்கள் ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை நாடு கடத்துவோம்” என குறிப்பிட்டுள்ளது. எனவே, குடியேற்ற விதிகளில் அமெரிக்கா கறாராக இருப்பது தெரியவந்தது.

Also Read : 20 முதல் 50 சதவீதம் வரை வரி.. 22 நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்கா எச்சரிக்கை

Also Read : H-1B விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.. இனி கூடுதலாக ரூ.21,000 செலுத்த வேண்டும்!

விசா விதிகளில் கட்டுப்பாடு

குடியேற்ற விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் தங்களது சமூக வலைதள விவரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. டிஎஸ் 160 படிவத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால சமூக வலைதளங்களின் முழுமையான விவரங்கள் குறிப்பிட வேண்டும் எனவும் இந்த விவரம் குறிப்பிடவில்லை என்றால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என தெரிவித்து இருந்தது.  அமெரிக்கா இதுபோன்ற விசா விதிமுறைகளை கடுமையாக்கி வருவது இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏறப்டுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.