15 வயது சிறுவன் உட்பட 2 பேருக்கு புனிதர் பட்டம்.. போப் 14 ஆம் லியோ அறிவிப்பு!

Two Declared as Saints by Pope 14 Leo | மனிதராக பிறந்து கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும் நபர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனிதர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில், 15 வயது சிறுவன் உட்பட இரண்டு பேருக்கு தற்போது புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுவன் உட்பட 2 பேருக்கு புனிதர் பட்டம்.. போப் 14 ஆம் லியோ அறிவிப்பு!

பட்டம் பெற்ற சிறுவன்

Published: 

08 Sep 2025 08:03 AM

 IST

வாடிகன் சிட்டி, செப்டம்பர் 08 : 15 வயது சிறுவன் உட்பட இரண்டு பேருக்கு போப் 14 ஆம் லியோ (Pope 14 Leo) புனிதர் பட்டம் வழங்கியுள்ளார். மனிதராக பிறந்து கடவுளுக்கு உகந்த முறையில் வாழ்ந்து இறந்துபோகும் நபர்களுக்கு இந்த புனிதர் பட்டம் வழங்கப்படும் நிலையில், தற்போது இந்த இரண்டு பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் புனிதர் பட்டம் வழங்க என்ன காரணம்,  அவர்கள் தங்களது வாழ்நாளில் அப்படி என்ன செய்தார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு பேருக்கு புனிதர் பட்டம் அறிவித்த போப் 14 ஆம் லியோ

வாடிகனை தலைமை இடமாக கொண்டு கத்தோலிக்க திருச்சபை இயங்கி வருகிறது. இங்குதான் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பணி செய்வார். கத்தோலிக்க திருச்சபையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை போப் ஆண்டவர் முடிவு செய்வார். அந்த வகையில் பூமியில் மனிதராக பிறந்து, கடவுளுக்கு உகந்த முறையில் வாழ்க்கை வாழ்ந்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக இருந்துவிட்டு இறக்கும் நபர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தேவ சகாயம், கேரளாவில் அல்போன்ஸ் ஆகிய குருக்கள் மற்றும் அன்னை தெரசா உள்ளிட்ட உலகின் பல முக்கியமான நபர்களுக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பட்டம் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டிரம்புடன் பிரச்னை… திடீரென அமெரிக்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

அந்த இருவருக்கு பட்டம் வழங்க என்ன காரணம்

1991 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து 2006 ஆம் ஆண்டு ரத்த புற்றுநோயால் உயிரிழந்த கார்லோஸ் அக்யுடிஸ் என்ற சிறுவனின் வாழ்க்கை புனித தன்மை மிகுந்ததாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. காரணம், வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அந்த சிறுவன், தனது வாழ்நாள் முழுவதும் இறைவன் மீது அதீத நம்பிக்கை மற்றும் நற்கருணை மீது மிகுந்த பற்றுக்கொண்டவராக இருந்துள்ளார். அவர் சமூக வலைத்தளங்கள் வழியாக பக்தியை பரப்பினார். இதனால் அவர் கடவுளின் இன்ஃப்ளூயன்சர் (Influencer of God) என அழைக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை வருங்கால இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப் அதிரடி..

ஏழைகளுக்கு தொண்டு செய்த ஜார்ஜியோ

இதேபோல இத்தாலியில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக தொண்டு செய்த ஜார்ஜியோ பிரசாட்டி என்ற நபருக்கும் புனிதர் பட்டத்தை போப் 14 ஆம் லியோ அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.