மத்திய கிழக்கில் குறையும் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்த ஈரான்..

இந்த அறிவிப்பிற்கு பின்னர், சர்வதேச எண்ணெய் விலை சுமார் 10% வரை சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜோசப் அவுன் ஆகியோருடன் நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் குறையும் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்த ஈரான்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

17 Apr 2026 19:32 PM

 IST

ஏப்ரல் 17, 2026: மத்திய கிழக்கு பகுதியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு, உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு சர்வதேச அளவில், குறிப்பாக எரிசக்தி சந்தையில் பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காசி அறிவிப்பின்படி, ஹோர்மூஸ் நீரிணையை போர்நிறுத்த காலத்தின் மீதமுள்ள நாட்களில் “முழுமையாக திறந்திருக்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை:

X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அனைத்து வணிகக் கப்பல்களும் இந்த கடற்பாதையை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார். ஆனால், இதற்கிடையில் அமெரிக்க கடற்படை தடுப்பு நடவடிக்கை (naval blockade) “பரிவர்த்தனை” முடியும் வரை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்யா – ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை ரத்து!

இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம்:

இந்த அறிவிப்பிற்கு பின்னர், சர்வதேச எண்ணெய் விலை சுமார் 10% வரை சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜோசப் அவுன் ஆகியோருடன் நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம், ஈரானுடன் போரை முடிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும், விரைவில் இரு நாடுகளின் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..