Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாலத்தீவுக்கு பிரதமர் மோடி 4,850 கோடி ரூபாய் கடன் உதவி அறிவிப்பு!

India Maldives partnership : இந்தியா - மாலத்தீவு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.4,850 கோடி மதிப்புள்ள கடன் உதவி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

மாலத்தீவுக்கு பிரதமர் மோடி 4,850 கோடி ரூபாய் கடன் உதவி அறிவிப்பு!
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jul 2025 23:20 PM

மாலத்தீவுக்கு (Maldives) இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இந்த பயணத்தின் போது ரூ.4,850 கோடி மதிப்புள்ள கடன் உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்தார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதைக் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த பயணம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு இருநாடுகளின் உறவுகளை மீண்டும் வலுத்துப்படும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது, “மாலத்தீவு, இந்தியாவின் மிக நம்பகமான நட்பு நாடு என்பதை பெருமையாகக் கூறுகிறேன்.  நம்பிக்கையின் அடிப்படையில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தியா எப்போதும் மாலத்தீவின் பாதுகாப்பை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும்” என்றார்.

இதையும் படிக்க : 4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி.. கையெழுத்தாகும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..

அதே நேரத்தில், இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  மாலத்தீவு, இந்தியாவின்  பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் ஒருங்கிணைந்த பார்வையிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடியை வரவேற்க மாலே விமான நிலையம் வரை வந்த அதிபர் முய்சு மற்றும் பல அமைச்சர்களின் வரவேற்பு, பிரதமர் மோடியின் பயணத்துக்கு மாலத்தீவு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. பின்னர் குடியரசு சதுக்கத்தில் பிரதமருக்கு பாரம்பரிய மரியாதையும், அந்நாட்டு முறைப்படி வரவேற்பும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க :  4,078 நாட்கள்.. இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டின் மூலம் பதவிக்கு வந்த முய்சு, ஆரம்பத்தில் இந்தியா மீதான கடுமையான அணுகுமுறையைக் கடைத்தொடர்ந்திருந்தார். அவர் பதவியேற்ற நாள் அன்று மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இந்தியா, ராணுவத்தினரை மாற்றி சிவிலியர்களை நியமித்தது. இந்திய ராணுவம் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு போன்ற பல்வேறு வகைகளில் மாலத்தீவிற்கு உதவியது.

இந்தியாவின் அரசியல் முயற்சிகளும், பொருளாதார நெருக்கடிகளின் போது மாலத்தீவுக்கு வழங்கிய உதவிகளும், இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மீண்டும் பழைய நிலையில் கொண்டு வந்துள்ளன. இந்திய கடற்படை பகுதியில் முக்கியமான அண்டை நாடாக மாலத்தீவு இருப்பது, இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்கு மிகவும் அவசியமாகும். இந்த பயணம், இருநாடுகளின் உறவுகளை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.