துரு பிடிக்கும் நிலவு.. பூமிதான் முக்கிய காரணம்.. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய நிகழ்வு!
Moon Rusting Mystery Solved | பிரபஞ்சத்தின் முக்கிய அங்கமாக உள்ளது நிலவு. பூமிக்கும் நிலவு மிக முக்கிய கோளாக உள்ளது. இந்த நிலையில், நிலவில் துரு பிடிப்பதாகவும் அதற்கு பூமிதான் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 28 : பிரபஞசம் தன்னுள் பல கோடி அதிசயங்களை கொண்டுள்ளது. மனிதர்கள் கண்டுபிடித்த இயற்கையின் பக்கங்கள், சக்திகள் எல்லாம் மிக குறைவு. இன்னும் மனிதர்களால் நெருங்க முடியாத பல விஷயங்கள் பிரபஞ்சம் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை கண்டுபிடிப்பதற்கான தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பல நாட்களுக்கான விடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நிலவு துரு பிடித்து வருவதாகவும், அதற்கு பூமிதான் முக்கிய காரணம் சென்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில், நிலவு துரு பிடிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலவு துரு பிடிக்கிறது – ஆய்வு மூலம் கண்டறிந்த விஞ்ஞானிகள்
சூரிய குடும்பத்தில் அங்கமாக இருக்கும் பூமிக்கு நிலா ஒரு முக்கியமான கோளாக உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் நிலவு குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு நடத்தப்படும் ஆய்வுகளில் பல தொடர்ச்சியான புதிய புதிய தகவல்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தான் தற்போது நிலவு குறித்த மேலும் ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது நிலவில் சத்தமே இல்லாமல் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற்று வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகசா புயல்.. 17 பேர் பலி.. 20 லட்சம் பேர் பாதிப்பு!
நிலவில் துரு பிடிக்க பூமி தான் முக்கிய காரணம் – விஞ்ஞானிகள்
அதாவது நிலவின் ஒருசில பகுதிகளில் துரு ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு பூமிதான் காரணம் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நிலவில் சில பகுதிகளில் இரும்பு ஆக்சைடின் ஒரு வடிவமான ஹேமடைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள விஞ்ஞானிகள், நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள் நிலவுக்கும், பூமிக்கும் இடையேயான ஆழமான தொடர்பை புரிந்துக்கொள்ள உதவுகின்றன என்று கூறியுள்ளனர். மேலும், பூமியின் வலி மண்டலத்தில் இருந்து செல்லும் துகள்களே இதற்கு காரணம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : H1B Visa : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?
சூரியனில் இருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகல்கள் (Charged Particles) பூமியையும், நிலவையும் வந்தடையும். ஒவ்வொரு மாதமும் சூரியன் மற்றும் நிலவுக்கு அருகில் பூமி வரும்போது பெரும்பாலான சூரிய துகல்கள் நிலவுக்கு செல்வது தடுக்கப்படும். அந்த காலக்கட்டத்தின் போது தான் புவி மண்டலத்தில் இருந்து செல்லும் துகல்கள் நிலவுக்கு செல்கிறது. இது புவி காற்று என்று அழைக்கப்படுகிறது. இதுபோல மாதத்திற்கு ஐந்த நாட்கள் நடைபெறும் நிலையில் அது ஆக்சிஜினேற்றம் அடைகிறது. இதன் காரணமாக தான் தண்ணீர், காற்று இல்லாத நிலவில் துரு உருவாகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.