Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gaza Hospital Attack: காசா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்.. பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி!

Israel Gaza Airstrike: இஸ்ரேலின் காசா மீதான வான் தாக்குதலில் நாசர் மருத்துவமனை குறிவைக்கப்பட்டது. குறைந்தது 15 பேர், 5 பத்திரிகையாளர்கள் உட்பட கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இரட்டை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. பல நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.

Gaza Hospital Attack: காசா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்..  பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி!
காசா மருத்துவமனை தாக்குதல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Aug 2025 20:14 PM

தெற்கு காசாவின் (Gaza) கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய (Israel Airstrike) வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மீட்புக் குழுவினர் வந்த சில நிமிடங்களில் இஸ்ரேல் இரட்டை ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகவும், முதலில் ஒரு ஏவுகணை தாக்கியதாகவும், பின்னர் மற்றொரு ஏவுகணை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசர் மருத்துவமனை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அல் ஜசீரா பத்திரிகையாளர் முகமது சலாமும் ஒருவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாக்குதல்:


கடந்த 22 மாதங்களாக இஸ்ரேல் காசா நகரத்தின் மீது ஹமாஸை குறிவைத்து கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காசா நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதல்களில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி 5 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 62,000 ஐத் தாண்டியுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போரில் 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ALSO READ: அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா..

இந்த தாக்குதல் நாசர் மருத்துவமனையின் 4வது மாடியில் நடந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணியாளர்கள் மீட்டவர்களை மருத்துவமனையின் உச்சிக்கு அடைவதற்குள் 2வது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து அதிக அளவு புகை கிளம்பியது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 2வது வாரத்தில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, காசா நகரை கைப்பற்றுவதற்கான முதல் நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் எடுத்துவிட்டதாக அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், காசா வான்வழித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது.. டிரம்ப் கருத்து!

சர்வதேச நாடுகள் எதிர்ப்பு:

காசா ஆக்கிரமிப்பு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்த முடிவை எந்த சூழ்நிலைகளிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளன. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. மறுபுறம், ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலின் முடிவை விமர்சித்துள்ளது. உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுகிறது.