மளமளவென பற்றி எரிந்த வணிக வளாகம்.. 60 பேர் பரிதாப பலி.. ஈராக்கில் துயர சம்பவம்!
Iraq Shopping Mall Fire Accident | மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் உள்ள ஒரு மிகப்பெரிய வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 60 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிய வராமல் உள்ளது.

பாக்தாத், ஜூலை 18 : ஈராக்கில் (Iraq) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து (Shopping Complex Fire Accident) காரணமாக 60 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இந்த தீ விபத்து தொடர்பாக வணிக வளாகம் பற்றி எரியும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈராக் வணிக வளாக தீ விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீப்பற்றி எரிந்த வணிக வளாகம் – 60 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக ஈராக்கின் அல் குட் நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது அந்த பகுதியின் மிகப்பெரிய வணிக வளாகம் என்பதால் சம்பவத்தன்று ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர். இந்த நிலையில், வணிக வளாகம் தீப்பிடித்து எரிய தொடங்கிய நிலையில், வணிக வளாகத்தில் இருந்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




இதையும் படிங்க : நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுக்க ஏமன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர பேச்சுவார்த்தை: கருணைக்கு ஒரு கடைசி வாய்ப்பு!
இந்த வணிக வளாகம் 5 மாடி கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில், கட்டணத்தின் அனைத்து தளங்களிலும் தீ பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கட்டடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் வணிக வளாகத்திற்கு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள், ஊழியர்கள் என 60 பேர் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பற்றி எரியும் 5 மாடி கட்டடம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
بالفيديو | واسط : هذا ما تبقى من “هايبر ماركت الكوت” الذي أتت عليه النيران بالكامل ، بعد أيام قليلة من افتتاحه#قناة_الغدير_الخبر_في_لحظات pic.twitter.com/QqOQ1OVCSY
— قناة الغدير (@alghadeer_tv) July 16, 2025
வணிக வளாகத்தில் 5 மாடி கட்டடமும் தகதகவென தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே 60 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த சுற்று வட்டார பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.