AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியா கண்டனம்!

Indian Government Condemns Iran's Attack On Oman Ship | அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ரத்தாகியுள்ள நிலையில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியா கண்டனம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2026 00:28 AM IST

டெல்லி, ஜூலை 12 : இந்திய மாலுமிகள் பயணம் செய்த சரக்கு கப்பல் மீது ஈரான் (Iran) தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மூன்று மாத போருக்கு பிறகு ஈரான் மற்றும் அமெரிக்கா (America) இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் , அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மீண்டு மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த வகையில், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான், இந்திய மாலுமிகள் பயணம் செய்த கப்பலையும் தாக்கியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் வெடித்த போர்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் நிலவி வந்த நிலையில், ஹோர்முஸ் வழியாக சென்ற மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, அமைதி ஒப்பந்தம் ரத்தானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது.

Follow Us