Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Pakistan Conflict : பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்

India’s Actions Against Pakistan : இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆறு முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்தியா உறுதிப்படுத்தாத நிலையில், 3 விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

India Pakistan Conflict : பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 May 2025 05:42 AM

பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர் விமான நிலையம், அவன்டிபோரா வான்படை தளம், பாதன்கோட், ஃபெரோஸ்பூர், ஜெய்சல்மீர் உள்ளிட்ட 26 இடங்களை இலக்காக கொண்டு டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா உடனடியாக S-400 Triumf, Barak-8 MRSAM, ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மூலம் டிரோன்களைத் தடுத்தன. இதில் பெரும்பாலானவை வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டன. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு ட்ரோன் தாக்குதலில் மூவர் காயமடைந்து உள்ளனர். இராணுவ மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகமான ட்ரோன் நகர்வுகளை கண்காணித்து, அவற்றை உடனடியாக தடை செய்தனர்.

பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்

இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆறு முக்கிய நகரங்களில் இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதிகளில் பெரிய வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானப்படை தளம் உள்ளிட்ட 3 விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா இதனை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமானப் போக்குவரத்துக்கான வான் வெளியை மே 10, 2025 அன்று காலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

32 இந்திய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

 

இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விமான நிலையங்களில் மே 9 முதல் மே 14 வரை அனைத்து சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட விமான நிலையங்களில் அம்ருத்சர், அம்பாலா, ஜம்மு, ஸ்ரிநகர், லே, பூஜ், பாதிந்தா, ஜோத்பூர், ஜைசல்மீர், சிம்லா, பியூண்டர் உள்ளிட்டவை அடங்கும்.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்


இதற்கிடையே பாகிஸ்தானில் மே 10, 2025 சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுள்ள நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 29.67 வடக்கு அட்சரேகை மற்றும் 66.10 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தில் சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானைத் தாக்கும் நான்காவது நிலநடுக்கம் இதுவாகும்.

இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா...
டெல்லியை நோக்கி வந்த பாக். மிசைல்... வீழ்த்திய இந்தியப்படை..!
டெல்லியை நோக்கி வந்த பாக். மிசைல்... வீழ்த்திய இந்தியப்படை..!...
போர் பதற்றம்: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருக்குமா?
போர் பதற்றம்: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருக்குமா?...
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்...
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!...
”மனித வெடிகுண்டாக மாற தயார்" அமைச்சர் சொன்ன பகீர் தகவல்
”மனித வெடிகுண்டாக மாற தயார்
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?...
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்...
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்...