கலைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. நியூயார்க்கில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

Huge Christmas Tree Height of 7 Floors | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகமே தயாராகி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 மாடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

கலைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. நியூயார்க்கில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்

Updated On: 

07 Dec 2025 18:35 PM

 IST

வஷிங்டன், டிசம்பர் 07 : இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை கொண்டாட உலகமே தயாராகி வருகிறது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளை வண்ண விலக்குகளை கொண்டு அலங்கரிப்பது, கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிப்பது, குடில் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிப்பது மிகவும் பாரம்பரியமாக உள்ளது. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், பொதுவெளி என அனைத்து இடங்களிலும் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் வியப்பூட்டுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் (America) 7 மாடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ள வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 மாடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு கொண்டாட்டங்களும் கலைக்கட்ட தொடங்கியுள்ளன. அந்த வகையில் நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் சென்டர் என்ற பகுதியில் சுமார் 7 மாடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த மரம் வண்ண விலக்குகளை கொண்டு மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த மரத்தை அலங்கரிக்க சுமார் 50 ஆயிரம் வண்ண விலக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரம் முழுவதும் வண்ண விலக்குகளால் மிண்ண மரத்தின் உச்சியில் ஒரு ஒற்றை நட்சத்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் நியூயார்க்கில் மட்டுமன்றி, உலக அளவில் கவனத்தை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயல்கள்.. 5.5 கோடி மக்கள் பாதிப்பு!

கவனத்தை ஈர்த்து வரும் 7 மாடி உயர கிறிஸ்துமஸ் மரம்

இந்த 7 மாடி உயரம் கொண்ட வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது மிகவும் பிரபலமாக மாறியுள்ளது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை