ஹாங்காங்கில் தீவிர சூறாவளி எச்சரிக்கை.. அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்!
Hong Kong Typhoon Warning | ஹாங்காங்கில் தீவிர சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அங்கு அதிகபட்ச எச்சரிக்கையான டி10 சிக்னலை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது. சூறாவளியின் தாக்கம் அங்கு மிக தீவிரமாக உள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு தொடர் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஹாங்காங், ஜூலை 20 : ஹாங்காங்கில் (Hongkong) அதிகபட்ச சூறாவளி எச்சரிக்கை (Highest Typhoon Warning) விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளியின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அங்கு டி10 சிக்னல் வெளியிடப்பட்டுள்ளது. சூறாவளி விபா (Typhoon Wipha) மிக கடுமையான சேதங்களை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கபடுவதால் அங்கு பொதுமககளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிகபட்ச எச்சரிக்கையான டி10 சிக்னலை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த தொடர் எச்சரிக்கையால் பொதுமக்கள் கடும் பயத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், ஹாங்காங்கில் விடுக்கப்பட்டுள்ள சூறாவளி எச்சரிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹாங்காங்கில் அதிகபட்ச சூறாவளி எச்சரிக்கை – பீதியில் பொதுமக்கள்
ஹாங்காங்கை நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் சூறாவளி விபாவுக்கு, ஹாங்காங் அரசு மிக உயர்ந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த எச்சரிக்கை பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் இன்று (ஜூலை 20, 2025) காலை 9.30 மணிக்கு டி10 சிக்னலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதான் மிகவு உயர்த்த எச்சரிக்கையாக கருதப்படுகிறது. அதன்படி, இந்த சூறாவளி நண்பகலில் தெற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நகர்ந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : உலகின் பழமையான நாடு எது? – இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அல்ல… ஆச்சரியப்படுத்தும் புதிய நாடு எது?




அதிகபட்ச எச்சரிக்கை என்ன?
ஹாங்காங்கில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அதிகபட்ச எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்கு மணிக்கு 118 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் காற்று வீசும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான மற்றும் அசாதரனமான சூழல்களில் மட்டும் தான் இந்த டி 10 சிக்னல் வெளியிடப்படும். இந்த சிக்னல் கடைசியாக 2023 ஆம் ஆண்டு சூறாவளி சாவோலாவின் போது வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் டி10 சிக்னல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகளை ரத்து செய்த ஹாங்காங் அரசு
ஹாங்காங்கின் இந்த சூறாவளி மிகவும் தீவிரமாக உள்ள நிலையில், அங்கு வருடாந்திர புத்தக கண்காட்சி மற்றும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சூறாவளி காரணமாக ஹாங்காங்கில் பலத்த காற்று வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. அங்கு அரசு தற்காலிக தங்கும் முகாம்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், பாதுகாப்பை கருதி சில பொதுமக்கள் அங்கு சென்று தங்கியுள்ளனர். இருப்பினும் அங்கு தீவிரமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.