Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அணு ஆயுத சோதனையில் இறங்கும் அமெரிக்கா.. டிரம்ப் அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?

America Nuclear Weapon Test | ரஷ்யா தொடர்ந்து தனது அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 30, 2025) மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அணு ஆயுத சோதனையில் இறங்கும் அமெரிக்கா.. டிரம்ப் அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?
டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Oct 2025 08:26 AM IST

மாஸ்கோ, அக்டோபர் 31 : அணு ஆயுத சோதனை (Nuclear Weapon Test) மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ரஷ்யா (Russia) தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அது குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ள டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்கா சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டிரம்ப் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்ட டிரம்ப்

சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் 1900 காலக்கட்டத்தில் கடுமையான பனிப்போர் நிலவியது. இதன் காரணமாக அந்த இரண்டு நாடுகளும் தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு பிற உலக நாடுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன. இந்த போரில் சோவியத் ரஷ்யா தோல்வியை தழுவி, ரஷ்யாவாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள கூடாது என ஐநா தடை விதித்தது.

இதையும் படிங்க : துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்.. நள்ளிரவில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் ரஷ்யா

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு உலக தலைவர்கள் முயற்சி செய்த நிலையிலும், ரஷ்ய அதிபர் புதின் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் ரஷ்ய ராணுவம் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரஷ்யா, பறக்கும் அணு உலை என கூறப்படும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான புரெவ்ஸ்ட்னிக் என்பதை தான் தற்போது சோதனை செய்து வருகிறது.

இதையும் படிங்க : நெப்போளியன் வைர நகைகள் கொள்ளை விவகாரம்.. இரண்டு பேர் அதிரடி கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் ரஷ்யா, நேற்று (அட்கோபர் 30, 2025) கட்டுக்கடங்காத தூரம் செல்லும் நூர்மூழ்கி ட்ரோனை சோதனை செய்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. ரஷ்யா 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அடுத்த 5 ஆண்டுகளில் ரஷ்யா அமெரிக்காவை ஈடு செய்துவிடும்.

மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை சோதிப்பதால் நமது அணு ஆயுதங்களை சமமாக சோதனை செய்ய ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.