சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை…எந்த நாட்டில் தெரியுமா!

Australia Bans Social Media: உலகத்தில் முதல் நாடாக ஆஸ்திரேலியா தனது நாட்டில் 16 வயதுக்குள்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் தடை விதித்துள்ளது. இந்த தடை எதற்காக என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை...எந்த நாட்டில் தெரியுமா!

சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

Published: 

10 Dec 2025 12:50 PM

 IST

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களை (Social Media) பயன்படுத்துவதை அந்த நாடு இன்று புதன்கிழமை (டிசம்பர் 10) முதல் தடை விதித்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்த முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது. இதன் மூலம் சமூக ஊடகங்களான டிக்டாக், ஆல்பாபெட்டின், யூடியூப் மற்றும் மெட்டாவின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சிறுவர் மற்றும் சிறுமிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, புதிய சட்டத்தின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று 10 பெரிய நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க: இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க தயாராகும் டிரம்ப்.. இந்த முறை விவசாயிகளை குறி வைக்கிறார்!

சமூக ஊடக தடைக்கு எதிர்ப்பும்- ஆதரவும்

இதற்கு, பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், ஆஸ்திரேலியா நாட்டு அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் வரவேற்றுள்ளனர். உலகத்தில் தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நன்மைகளும், தீமைகளும் அதில் நிறைந்துள்ளன. அதில், நன்மைகளை விட தீமைகளே அதிக அளவில் உள்ளன. அதிலும் சமூக ஊடகங்களை உபயோகிக்கும் நபர்களில் சிறுவர், சிறுமிகளை மட்டுமே அதிக அளவில் தீமைகள் வந்து சேர்கிறது.

சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்

இதனால் தேவையில்லாத பிரச்சனைகளில் அவர்கள் விவரம் தெரியாமல் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தாத வகையில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருந்து வருகிறது.

சிறுவர், சிறுமிகளின் எதிர்கால நலன் கருதி…

இந்த நிலையில் தான் உலகத்தில் முதல் நாடாக ஆஸ்திரேலியா தனது நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளின் எதிர்கால நலன் கருதி சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இணைய வழி குற்றங்கள் உள்ளிட்டவற்றில் அவர்கள் சிக்கும் நிலை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தோனேசியாவில் 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. கர்ப்பிணி உட்பட 20 பேர் உடல் கருகி பலி!

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?