Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெளிநாட்டவர்களை கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கும் ரஷ்யா.. சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு!

Russia's Compelling Other Countries People To Join Its Army | ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தனது எல்லைகளை பாதுகாக்க போதிய ராணுவ வீரர்கள் இல்லாததன் காரணமாக ரஷ்யா வெளிநாட்டவர்களை ராணுவத்தில் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளிநாட்டவர்களை கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கும் ரஷ்யா.. சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Dec 2025 08:33 AM IST

மாஸ்கோ, டிசம்பர் 09 : உக்ரைன் மற்றும் ரஷ்யா (Ukraine and Russia) இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மிக கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் மிக கடுமையான உயிர் சேதங்கள், ஆயுத இழப்பு ஆகியவற்றை சந்தித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக போரை முடிவுக்குன் கொண்டுவராமல் ரஷ்யா பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) இரு நாடுகளுக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்து வருகிறார்.

போதிய ராணுவ வீரர்கள் இல்லாமல் தவிக்கும் ரஷ்யா

உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதேபோல ரஷ்யாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான வடகொரியா தனது நாட்டில் இருந்து சுமார் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால், மிக பரந்த நிலத்தை கொண்டுள்ள ரஷ்யாவுக்கு அதன் எல்லைகளை பாதுகாக்க ராணுவ வீரர்கள் போதுமான அளவில் இல்லை.

இதையும் படிங்க : குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்க இந்த 19 நாடுகளுக்கு தடை.. அதிரடி தடை உத்தரவு பிறப்பித்த அமெரிக்கா!

வெளிநாட்டவரை டார்கெட் செய்து ராணுவத்திற்கு அனுப்பும் ரஷ்யா

இவ்வாறு மிகப்பெரிய பரப்பளவை கொண்ட ரஷ்யாவை பாதுகாக்க அதிக அளவு ராணுவ வீரர்கள் வேண்டும் என்பதால் ரஷ்ய அரசு ஒரு மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதாவது வேலை, படிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக ரஷ்யா செல்லும் நபர்களை அந்த நாட்டு அரசு கட்டாயமாக ராணுவத்தில் இணைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதையும் படிங்க : Poop Suitcase என்றால் என்ன? அதிபர் புதின் ஏன் இதை வெளிநாட்டு பயணங்களின் போது எடுத்து செல்கிறார்?

சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யும் அரசு

குறிப்பாக வெளிநாட்டவை ராணுவத்தில் இணைப்பதற்காக ராணுவத்தில் இணையும் வெளிநாட்டவருக்கு ரஷ்ய குடியுரிமை, மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ரஷ்ய அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா தனது ராணுவத்தை விரிவுப்படுத்த இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இது ஏமாற்று வேலை என பலரும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.