Donald Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நரம்பு நோய்..விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை!

Donald Trump Diagnosed with Chronic Venous Insufficiency | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வகையான நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சமீப காலமாகவே டிரம்பின் கை மற்றும் கால்களில் காயங்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Donald Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நரம்பு நோய்..விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை!

டொனால்ட் டிரம்ப்

Updated On: 

19 Jul 2025 09:31 AM

அமெரிக்கா, ஜூலை 19 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) ஒரு வகையான நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை (White House) விளக்கம் அளித்துள்ளது. சமீப காலமாக டொனால்ட் டிரம்பின் உடலில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்ட நிலையில், டிரம்பின் உடல்நிலை குறித்து கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை இவ்வாறு கூறியுள்ளது. இந்த நிலையில், டிரம்புக்கு என்ன நோய் உள்ளது அது குறித்து வெள்ளை மாளிகை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக் பார்க்கலாம்.

சமீப காலமாக கை, கால்களில் காயங்கள் மற்றும் வீக்கங்களுடன் இருந்த டிரம்ப்

சமீப காலமாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடலில் சில இடங்களில் காயங்களும், வீக்கங்களும் காணப்பட்டு வந்தன. குறிப்பாக நியூ ஜெர்சியில் நடைபெற்ற பிஃபா உலக கோப்பை (Fifa World Cup) இறுதி போட்டியின் போது எடுக்கப்பட்ட டிரம்பின் வீங்கிய கால்கள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கையில் காயங்கள் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இவை டிரம்பின் உடல் நலம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்ப காரணமாக அமைந்தது.

டிரம்பின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்

இது குறித்து கூறியுள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு Chronic Venous Insufficiencey என்ற நரம்பு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய் உலகில் இருவதில் ஒருவரை மட்டுமே பாதிக்கும். அதாவது கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி கைகுலுகுவதால் ஏற்பட்ட திசு சேதம் மற்றும் இதய நோய் தடுப்பு மருந்தான ஆஸ்பிரின் மருந்து பயன்பாடு இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : 20 முதல் 50 சதவீதம் வரை வரி.. 22 நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

கால்களில் உள்ள நரம்புகளுக்கு இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு செலுத்துவதில் சிரமம் ஏற்படும் போது இந்த நிலை உருவாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றபடி தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சனைகள் போன்ற கடுமையான பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் இந்த நோய் கண்டறியப்பட்டாலும் டிரம்புக்கு எந்த விதமான வலி அல்லது அசவுகரியம் எதுவும் ஏற்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.