ஓடும் ரயிலில் புகைப்படிக்கும் இளம் பெண் – வைரல் வீடியோ

Viral Video : இந்தியாவில் இளைஞர்கள் ரயிலில் பயணிகளுக்கு இடைஞ்சல் அளிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இளம் பெண் ஒருவர் ரயிலில் புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஓடும் ரயிலில் புகைப்படிக்கும் இளம் பெண் - வைரல் வீடியோ

ரயிலில் புகைப்பிடிக்கும் இளம் பெண்

Published: 

16 Sep 2025 21:06 PM

 IST

சமீப காலமாக ரயில்களில் (Train) இளைஞர்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கும் விதமாக நடந்து வருகிறார்கள். அருகில் பயணிகள் இருந்தாலும், அவர்கள் எந்த பொது அறிவும் இல்லாமல் தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கிறார்கள். விதிகளை மீறி ஓடும் ரயில் ரீல்ஸ் எடுப்பது மற்றும் பயணிகளுக்கு தொல்லையளிக்கும் விதமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில், ஓடும் ரயிலில், அதுவும் ஏசி பெட்டியில் ஒரு இளம் பெண் சிகரெட் புகைப்பிடிக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்ட சக பயணிகளை அவர் கடுமையாக சாடினார். இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஏசி கோச்சில் சிகரெட் பிடிக்கும் இளம் பெண்

ஏசி கோச்சில் ஒரு இளம் பெண் சிகரெட் புகைப்பதைக் கவனித்த ஒரு நபர், அவளை அணுகி கேள்வி எழுப்பினார். இந்த ஏசி கோச்சில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்று உங்களுக்குத் தெரியாதா என கேட்டார்.  அவர் முறையாக பதிலளிக்காத நிலையில், அவர் சீரியஸாகி, வெளியே சென்று சிகரெட் புகைக்கச் சொன்னார். அவர் சிகரெட் புகைக்கும் காட்சிகளையும் பதிவு செய்தார்.

இதையும் படிக்க  : Porsche-ல் மின்னல் வேகத்தில் பறந்த தாய்.. ஆச்சரியத்தில் வாயடைத்து போன மகன்!

கோபமடைந்த இளம் பெண் அவரை நோக்கித் திரும்பினார். ரயில் உங்களுடைய சொத்து என நினைக்கிறீர்களா? அல்லது நான் உங்கள் பணத்தில் சிகரெட் புகைக்கிறேனா? அவள் அந்த நபருடன் மிகவும கோபமாக சண்டையிடுகிறார். நீங்கள் போலீசாரிடம் சொல்ல விரும்பினால், அவர்களிடம் சென்று சொல்லுங்கள் என்று மிகவும் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

வைரல் வீடியோ

 

இதையும் படிக்க : சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்த சிறுவன்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!

அங்கிருந்த வேறு சில பயணிகள் இந்த சம்பவத்தை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இளம் பெண்ணின் நடத்தையைக் கண்டு கோபமடைந்துள்ளனர். பொது இடங்களில் புகைப்படிக்க கூடாது என்பது விதி. புகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ரயிலில் அதுவும் குழந்தைகள் பெரியவர்கள் வரை பயணிக்கும் ரயிலில் இது போன்று புகைப்பிடிப்பது அவர்களின் உடல் நிலையையும் வெகுவாக பாதிக்கும்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!