Viral Video : ஜிம்மில் Workout செய்யும்போது ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. லெக் டேவால் எழுந்து ஓட முடியாமல் தவித்த இளைஞர்!
Viral Gym Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அவரால் எழுந்து ஓட முடியாமல் தவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில அசாத்தியமான விஷயங்கள் நடைபெறும்போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நம்மை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தும். இதற்காகவே தற்போது அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் நிலையில், அவற்றின் மூலம் சில சுவாரஸ்ய சம்பவங்கள் உலகிற்கு தெரிய வந்துள்ளன. அத்தகைய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிம்மில் Workout செய்யும்போது இளைஞருக்கு வந்த சிக்கல்
தற்போதைய இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இதன் காரணமாக பலரும் ஜிம்முக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலை வலிமைப்படுத்த தனி சிறப்பான உடற்பயிற்சிகள் வழங்கப்படும். அத்தகைய பயிற்சிகளில் ஒன்றுதான் லெக் டே. கால்களை வலிமையாக்குவது இந்த பயிற்சியின் முதன்மை நோக்கமாகும். இந்த நிலையில், ஜிம்மில் லெக் டே செய்த இளைஞருக்கு வந்த ஒரு சிக்கல் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்… மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் – வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடம் முழுமையாக குலுங்குகிறது. உடனடியாக உடற்பயிற்சி செய்துக்கொண்டு இருந்த நபர்கள் அனைவரும் அந்த இடத்தில் இருந்து தலை தெறிக்க ஓடுகின்றனர். அப்போது கால்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்த இளைஞர் எழுந்து ஓட முயற்சி செய்கிறார். வழக்கமாக லெக் டே உடற்பயிற்சி செய்தால் கால்களில் சதை பிடித்தம் ஏற்பட்டு அதிக வலி கொடுக்கும். இதன் காரணமாக அந்த இளைஞரால் எழுந்து ஓட முடியவில்லை. அவர் எவ்வளவு முயற்சி செய்து அவரால் ஓட முடியாத நிலையில், எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று அவர் தரையில் தவழ்ந்தபடி செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சிய வரிக்குதிரை.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.