Viral Video : பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
United Arab Emirates Falcon Passport : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பருந்துக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு வெளிநாட்டுப் பயணி அபுதாபி விமான நிலையத்தில் இந்த நிகழ்வைப் பதிவு செய்துள்ளார். பருந்தின் உரிமையாளர், தனது செல்லப் பருந்தை மொராக்கோவிற்கு அழைத்துச் செல்வதற்காக பாஸ்போர்ட் பெற்றதாகக் கூறியுள்ளார்.

உலகத்தில் பலநாடுகள் இருந்தாலும் செல்வத்திலும் சரி, வித்தியாசமான செயல்களிலும் சரி அதிகம் ஈடுபடுபவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) (United Arab Emirates) மக்கள்தான். பொதுவாக அரபு நாட்டு மக்கள் செல்லப்பிராணிகளாகச் சிங்கம், புலி மற்றும் கருஞ்சிறுத்தை (Lion, tiger and leopard) என வித்தியாசமாகவும் மற்றும் பயங்கரமான விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். இந்தியாவைப் (India) பொறுத்தவரைக் காட்டு விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும் (Act against the law). ஆனால் அரபு நாடுகளில் (Arab countries)அவ்வாறு கிடையாது. அவர்கள் புலி, சிங்கம் மற்றும் பிறவிகளில் பருந்து, கழுகு என வித்தியாசமான விலங்குகளை வளர்ப்பார்கள். அந்த வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரவலாகி வருகிறது. அதில் ஒரு அரபு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் , ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பருந்துக்கும் (Falcon) பாஸ்போர்ட் (Passport) வழங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவானாது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர். அந்த அரபு நாட்டு நபர் தனது செல்லப் பிராணியான பருந்துக்கு பாஸ்போர்ட்டை வாங்கி மொராக்கோவிற்கு பயணம் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். இதை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் கவனம் பெரும் வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவில் வெளிநாட்டு பயணி ஒருவர், அபுதாபி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர்வாசி ஒருவர் ஒரு பருந்தை வைத்திருப்பதைப் பார்த்துள்ளார், உடனே அந்த வெளிநாட்டு நபர் அவரை அணுகி, ”இந்தப் பருந்து உங்களுடன் விமானத்தில் வருமா..?” என்று கேட்டார். மேலும் பருந்துக்கு பாஸ்போர்ட் இருக்கிறதா? அவர் கேட்டார். அதற்கு அரபுநாட்டைச் சேர்ந்த நபர் “ஆமாம், ஒரு பருந்துக்குக் கூட பாஸ்போர்ட் இருக்கிறது” என்று சொன்னது மட்டுமல்லாமல், கேள்வி கேட்டவரிடம் பாஸ்போர்ட்டையும் காட்டினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பறவைகளுக்கு எவ்வாறு பாஸ்போர்ட் கொடுக்கிறார்கள், நமது நாட்டில் நமக்கு கூட பாஸ்போர்ட் கிடைப்பதற்கு தாமதமாகிறதே என்று கூறி வருகின்றனர்.
வீடியோவின் கீழ் இணைய பயனர்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கேள் முதல் பயணர் ஒருவர் “நம்மைப் போல மனிதர்களை விட, அந்த பருந்து சிறந்த வாழ்க்கையை வாழ்கிறது ”என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “சாதாரணமான மனிதர்களுக்குக் கூட பாஸ்போர்ட் கிடைப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது, இந்த நபர் தனது பருந்திற்கு பாஸ்போர்ட் வாங்கி வைத்திருக்கிறார் யோகம்தான்” என்று கூறியுள்ளார்.