டிம் குக் முன்பு ஐபோன் 17-ஐ தவறவிட்ட இன்ஃப்ளூயன்சர்.. அடுத்து நடந்தது என்ன?
Man Drops iPhone 17 In Front of Tim Cook | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம் ஆட்டோகிராஃப் வாங்கும்போது ஒருவர் ஐபோனை கீழே தவறவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் (Apple iPhone 17 Series) ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் முன்பு இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தான் புதியதாக வாங்கி ஐபோன் 17 ஸ்மார்ட்போனை தவற விடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிம் குக் முன்பு ஐபோனை 17-ஐ தவற விட்ட நபர்
ஆப்பிள் நிறுவனம் ஓவ்வொரு ஆண்டும் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 2025-ல் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் செப்டம்பர் 09, 2025 அன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 19, 2025 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் அந்த இன்ஃப்ளூயன்சர் டிம் குக் முன்பு ஐபோனை தவற விடும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : Thar காரில் டெலிவரி செய்யப்பட்ட Blinkit ஆர்டர்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
this is so embarrassing 😭 pic.twitter.com/AkrKd41Kn3
— Holly – I like tech (@AnxiousHolly) September 20, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தான் புதியதாக வாங்கிய ஆரஞ்சு நிற ஐபோன் 17 ஸ்மார்ட்போனை திறக்கிறார். அப்போது அந்த ஸ்மார்ட்போன் கீழே விழுகிறது. பிறகு அந்த ஸ்மார்ட்போனை எடுக்கும் அந்த நபர் டிம் குக்கிடம் கையெழுத்து வாங்குவதற்காக கொடுக்கிறார். அவர் போனின் பின்பக்கத்தில் கையெழுத்திட செல்லும்போது அவர் ஸ்மார்ட்போனை திருப்பி முன்பக்கம் ஓட்டப்பட்டு இருக்கும் பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பாட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத Golden Retriever.. உணர்ச்சி பொங்கும் வீடியோ வைரல்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், டிம் குக்கிற்கு முன்பாகவே அந்த நபர் டிராப் டெஸ்ட் செய்துவிட்டார் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். பேப்பரில் கையெழுத்து வாங்காமல் ஸ்மார்ட்போனில் கையெழுத்து வாங்கியிருந்தால் சிறப்பானதாக இருக்கும் என பலரும் கருத்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.