Viral Video : இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாமல் அழுத வெளிநாட்டு பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Foreign Tourist's Emotional India Farewell | வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாமல் அழுதுக்கொண்டே பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இந்தியாவில் இருந்து செல்வதற்கு மனம் இல்லாமல் அழுதுக்கொண்டே பதிவு செய்துள்ள விடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரகாகி வருகிறது. இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் தான் காதல் கொண்டுள்ளதாக அந்த பெண் தனது விடியோவில் கூறியுள்ளார். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து அழுதுக்கொண்டே விடைபெற்ற வெளிநாட்டு பெண்
ஒவ்வொரு நாடும் தனக்கென தனி சிறப்பை கொண்டிருக்கும். அந்த வகையில் இந்தியாவின் தனிச்சிறப்பாக காணப்படுவது அதன் பன்முக தன்மை தான். இந்தியாவில் பல தரப்பு மக்கள் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது. இத்தகைய சிறப்பை இந்தியா கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவர். அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இந்தியாவில் இருந்து செல்ல மனமில்லாமல் அழுதுக்கொண்ட பகிர்ந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மதுபோதையில் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோசில் பேசியுள்ள அந்த பெண், நான் பெங்களூருவில் 15 நாட்கள் தங்கியிருந்தேன். நான் இப்போது இந்தியாவில் இருந்து கிளம்ப வேண்டும். நான் இந்தியா மீது முழுவதுமாக காதல் கொண்டுள்ளேன். இந்தியாவில் மதங்கள் இணைந்துள்ளன. இங்கு இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என மூன்று மதங்கள் பரவலாக பின்பற்றப்படுகின்றன. அதுமட்டுமன்றி பெங்களூரில் உள்ள மனிதர்கள் மிகுந்த கலைநயத்துடன் தங்களது வீடுகளை கட்டியுள்ளனர். ஒவ்வொரு வீடும் பார்ப்பதற்கு கண்ணை கவரும் விதமாக உள்ளது.
இதையும் படிங்க : எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!
இந்தியா மிகவும் வெளிப்படையான நாடாக உள்ளது. இங்குள்ள மனிதர்கள் மிகவும் அன்புக்குறியவர்களாக உள்ளனர். எனக்கு இங்கிருந்து செல்வதற்கு மனமே இல்லை என அழுதுக்கொண்டே அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.