Viral Video : குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்பட்ட தந்தை.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

Father Getting Emotional To Hold Newborn | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது குழந்தையை முதல் முதலாக கையில் வாங்க உணர்ச்சிவசப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்பட்ட தந்தை.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

09 Mar 2026 19:54 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரைலாகும். அதில் சில வீடியோக்கள் பேசுபொருளாகவும், சில வீடியோக்கள் விவாதத்திற்கும் உள்ளாகும். இவ்வாறு பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தந்தை ஒருவர் புதியதாக பிறந்த தனது பச்சிளம் குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடன்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்பட்ட தந்தை

ஒரு குடும்பத்தின் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அந்த குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். அந்த குழந்தையின் வருகைக்காக அந்த குடும்பமே ஆவலுடன் காத்திருக்கும். இந்த நிலையில், தந்தைக்கு சொல்ல வேண்டும். ஒரு குழந்தை பிறப்பது தாய்க்கு எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்றோ அதே அளவுக்கு தந்தைக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இந்த நிலையில், தந்தை ஒருவர் தனது குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்படும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இந்த மொழி புரியவில்லையே.. ஆனால் அவ்வளவு அழகு.. மழலையின் செல்ல பேச்சின் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர் அந்த குழந்தையின் தந்தையிடம் கொடுக்க செல்கிறார். அப்போது அந்த தந்தை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முதலில் குழந்தையை கையில் வாங்க மறுக்கிறார். பிறகு மருத்துவர் கூறியதன் காரணமாக அவர் குழந்தையை கைகளில் வாங்குகிறார். அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். அவரை அந்த மருத்துவர் தேற்றுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : மெக்சிகோ மெட்ரோவை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது.. சுற்றுலா பயணி வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு