அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Wireless Earbuds Under 1000 Rupees | இளைஞர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பார்க்கப்படும் முக்கிய கருவி தான் இயர்பட்ஸ். இந்த நிலையில், அமேசானில் ரூ.1,000-க்குள் கிடைகும் இயர்பட்ஸ்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Apr 2026 19:22 PM

 IST

தற்போதைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் பரவலாக பார்க்கப்படும் ஒரு அம்சம் தான் இயர் பட்ஸ் (Ear Buds). தாங்கள் கேட்கும் பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் வெளியே யாருக்கும் கேட்காமல் இருக்கவும், யாருக்கும் தொந்தரவு இழைக்காமல் இருக்கவும் இந்த அம்சம் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிறிய கருவியை காதில் மாட்டிக்கொண்டு தனி உலகத்தில் வசிப்பவர்கள் பலர் உண்டு. இவ்வாறு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த இயர் பட்ஸ் உள்ள நிலையில், அமேசானில் ரூ.1,000-க்கும் குறைவாக கிடைக்கும் 5 இயர்பட்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசானில் ரூ.1,000-க்கும் குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்

அமேசானில் சில அட்டகாசமான அம்சங்கள் உடன் கூடிய சில இயர்பட்ஸ்கள் ரூ.1,000-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.

HAMMER Airflow Neo Earbuds

நீங்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவர் என்றால் உங்களுக்கு அதிக பேட்டரி திறன் கொண்ட இயர்பட்ஸ் தேவைப்படும். இந்த நிலையில் தான் இந்த  HAMMER Airflow Neo Earbuds உங்களுக்கு உதவியாக இருக்கும். இது 80 மணி நேரம் பிளே டைம் வசதியை கொண்டுள்ளது. இதன் தற்போதைய விலை வெறும் ரூ.599 ஆக மட்டுமே உள்ளது.

இதையும் படிங்க : ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!

pTron Bassbuds Astra in-Era TWS Earbuds

அடுத்ததாக அமேசானில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு இயர்பட்ஸ் தான் pTron Bassbuds Astra in-Era TWS Earbuds. வெறும் ரூ.598-க்கு இந்த இயர்பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸில் கஸ்டம் இக்யூ மற்றும் மொபைல் ஆஃப் சப்போர்ட் உள்ளதால் சவுண்ட் எஃபெக்ட்டை உங்களுக்கு ஏற்றவாறு மிக சுலபமாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!

Fire Bolt Aero TWS Earbuds

லேட்டஸ்ட் ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் மற்றும் 50 மணி நேர பிளேடைம் ஆகிய அம்சங்கள் இந்த Fire Bolt Aero TWS Earbuds சிறப்பாக இருக்கும். வியர்வை மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க இதில் ஐபிஎக்ஸ் 4 தண்ணீர் எதிர்ப்பு வசதியும் உள்ளது. இந்த இயர்பட்ஸின் விலை ரூ.9,000 ஆக இருந்தாலும் அமேசானில் தற்போது வெறும் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?