இண்டக்ஷன் அடுப்பின் மேல் உள்ள வளையத்தை கவனித்திருக்கிறீர்களா? அதன் பயன் என்ன தெரியுமா?

Cooking Technology Guide: பொதுவாக நாம் பயன்படுத்தும் இண்டக்ஷன் அடுப்புகளில் இருக்கும் வட்ட வடிவ வளையத்தை நாம் கவனித்திருப்போம். அது பெரும்பாலும் டிஷைன் என நினைத்திருப்போம். ஆனால் அதன் பின்னால் நம் சமையல் வேகமாகவும் சிக்கனமாகவும் மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பம் இருக்கிறது.

இண்டக்ஷன் அடுப்பின் மேல் உள்ள வளையத்தை கவனித்திருக்கிறீர்களா? அதன் பயன் என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

08 Apr 2026 21:44 PM

 IST

கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பலரும் இண்டக்ஷன்  அடுப்புகளுக்கு மாறி வருகிறார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் இண்டக்ஷன் அடுப்பின் மேற்பரப்பில் குறிக்கப்பட்டிருக்கும் அந்த வட்ட வடிவ வளையம் இருப்பதை கவனித்திருப்போம். நம்மில் பலர் இதை வெறும் டிஷைன் என்று கருதி, பெரும்பாலும் புறக்கணித்துவிடுகிறோம். ஆனால் உண்மையில், அந்த வளையத்திற்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் மறைந்திருக்கிறது. அதுவே நம் சமையல் செயல்முறையை வேகமாகவும்,  மின் கட்டணத்தை குறைக்கவும் மாற்றுகிறது.

இண்டக்ஷன் அடுப்பின் மேல் உள்ள வளையத்தின் பயன் என்ன தெரியுமா?

குறிப்பாக உங்கள் மின் கட்டணத்தைக் குறைப்பதிலும், உங்கள் அடுப்பின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் இந்தச் சிறிய வட்டம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கான ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும் அடையாளம் மட்டுமே இது என்று நீங்களும் முன்பு நினைத்திருந்தால், இப்போது அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

இதையும் படிக்க : ஒரே சார்ஜில் 212 கி.மீ பயணிக்கலாம் – இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இண்டக்ஷன் அடுப்பில் குறிக்கப்பட்டிருக்கும் அந்த வட்ட வடிவ வளையம், உண்மையில் அந்த அமைந்திருக்கும் காயிலின் இருக்கும் இடத்தை குறிக்கிறது. இந்த வளையத்திற்கு நேர் கீழே ஒரு காயில் அமைந்திருக்கும். இது பொதுவாகச் செம்பு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கும். இது மின் ஆற்றலை காந்த ஆற்றலாக மாற்றுகிறது.

நாம் அடுப்பை ஆன் செய்ததும், இந்த காயில் ஒரு எலக்ட்ரோ மேக்கனெட்டிக் ஆக உருவாகிறது.  இந்த எலக்ட்ரோ மேக்னெட்டிக் செயல்பாடு தான் அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் சமையல் பாத்திரத்தைச் சூடாக்குகிறது. இந்த இந்த எலக்ட்ரோ மேக்னேட்டிக் செயல்பாடு, அந்த வட்டத்திற்குள் மட்டும் தான் முழுமையாக இருக்கும். அதனால் நாம் சமையல் பாத்திரத்தை சரியாக வைப்பதற்காக, அடுப்பின் மேல் அந்த பாத்திரம் வைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிக்க : வங்கி கணக்கு காலியாகலாம்… ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பாதுகாப்பிலும் முக்கியத்துவம்

இதனால் நாம் பாத்திரத்தை சரியாக அந்த வளையத்தின் மேல் வைக்கும்போது சமையல் வேகமாக நடக்கிறது. இதனால் இன்டெக்ஷன் அடுப்பின் பயன்பாடு குறையும் என்பதால், நம்மால் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த முடியும். இதனால் மின் கட்டணம் பாதியாக குறையும்.

மேலும் இது நம் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வளையத்திற்குள் உள்ள சென்சார்கள் சமையல் பாத்திரம் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்காணிக்க உதவும். அப்படி சரியாக பாத்திரத்தை வைக்கவில்லை என்றால் அது அடுப்பு தானா ஆஃப் ஆகும். இதனால் காயில் பாதிக்கப்படாமல் தடுக்கும்.

 

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?