WhoFi: வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?

WiFi Identification: வைஃபை சிக்னல்களை மட்டும் பயன்படுத்தி மக்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம் WhoFi அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 95% துல்லியத்துடன் செயல்படுகிறது என்றாலும், தனியுரிமை மீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. கேமராக்கள் அல்லது பிற சாதனங்கள் இல்லாமல் செயல்படும் இந்த தொழில்நுட்பம், மறைமுக கண்காணிப்புக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

WhoFi: வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?

வைஃபை

Published: 

24 Jul 2025 22:06 PM

கேமராக்கள் அல்லது சாதனங்கள் இல்லாமல், வைஃபை (Wi-Fi) சிக்னல்களை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை WhoFi எனப்படும் புதிய அமைப்பு மூலம் அடையாளம் காண முடியும். இது எதிர்காலத்திற்கு ஏற்றதாக தோன்றினாலும், தனியுரிமை (Privacy) மற்றும் கண்ணுக்கு தெரியாத கண்காணிப்பு குறித்து கவலைகள் எழுந்தது. ஒரு அறைக்குள் நுழைந்து ஒருவர் உங்களை அடையாளம் காண்பதை கற்பனை செய்து பாருங்கள். இது உங்கள் தொலைபேசியால் (Cell Phone) அல்ல, ஸ்பை கேமராக்களால் அல்ல, உங்கள் வைஃபை சிக்னல்களை கொண்டு ரோமின் லா சபியன்சா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் WhoFi என்று அழைக்கும் ஒரு சாதனத்தின் மூலம் இதைச் செய்துள்ளனர். இது ஒருவகையில் மிகவும் பாதுகாப்பானது என்றாலும், தனியுரிமை குறித்த கவலையை எழுப்புகிறது.

என்ன செய்யும் WhoFi..?

வழக்கமான கண்காணிப்பு அமைப்புகள் காட்சி அல்லது செவிப்புலன் அடிப்படையில் கண்காணிக்கும் அதே வேளையில், WhoFi மிகவும் நுட்பமான ஒன்றைக் கவனிக்கிறது. மனித வடிவத்தால் உருவாக்கப்பட்ட Wi-Fi சிக்னல் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை இது கண்டறிகிறது. இது உங்கள் அளவு, வடிவம் என இவை அனைத்தும் அருகிலுள்ள வயர்லெஸ் சிக்னல்களில் நுட்பமான விஷயங்களை கண்காணிக்கும்.

ALSO READ: இந்த ஒரே ஒரு செயலி போதும்.. காணாமல் போன ஸ்மார்ட்போன் உங்கள் வசம் வந்துவிடும்!

இந்த மாற்றங்கள் மற்றும் உள்ளீடுகளை ஒரு நரம்பியல் நெட்வொர்க்கிற்குக் கண்காணிப்பதன் மூலம், இந்த அமைப்பு ஒருவரிடமிருந்து இன்னொருவரை வியக்கத்தக்க துல்லியத்துடன் வேறுபடுத்திக் காட்டக் கற்றுக்கொள்கிறது. NTU-Fi எனப்படும் பொதுவான Wi-Fi உணர்திறன் தரவுத்தொகுப்பைப் பயன்படுத்தி ஆய்வகப் பரிசோதனைகளில், WhoFi 95.5% துல்லியத்துடன் மக்களை அடையாளம் காணும் என்று கூறப்படுகிறது.

புதிய வகை கண்டுபிடிப்பு:

கேமராக்கள் இல்லாதது தனியுரிமைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்றாலும், இது அவ்வளவு எளிதானது அல்ல. WhoFi படங்களையோ அல்லது ஆடியோவையோ சேவ் செய்தாது. ஆனால் அது தனிநபர்களை முழு அளவில் வெளிப்புறமாக ஆராயும். இருப்பினும், ஒருத்தரின் அனுமதியோ விழிப்புணர்வும் இல்லாமல் ஆராயும் என்பதால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற வெளிப்படையான பயோமெட்ரிக் தரவை இது எடுக்கவில்லை என்றாலும், ஒரு இடத்தில் உங்கள் உடல் இருப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயவிவரத்தை உருவாக்குகிறது. ஆராய்ச்சியாளர்களே இதன் ஆபத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படி, இந்த வகை தொழில்நுட்பம் ஒரு வீடு, அலுவலகம் அல்லது பொது இடத்தில் மறைமுக கண்காணிப்பை எளிதாக்கும்.

ALSO READ: e Mail-ல் வரும் இந்த லிங்கை கிளிக் செய்யாதீங்க.. வருமான வரி தாக்கல் மோசடி குறித்து எச்சரிக்கும் PIB!

பயன்பாட்டில் இல்லை:

இதுவரை, WhoFi ஆய்வகத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது வணிக அல்லது அரசு பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்படவில்லை. WhoFi நமக்கு ஒரு புதிய வகையான உணர்தலை அறிமுகப்படுத்துகிறது. இது கண்ணுக்குத் தெரியாதது, உங்களை தொடாதது மற்றும் மிகவும் துல்லியமானது. இருப்பினும், அந்த திறனுடன், திறந்த தன்மை, பொறுப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதி பெறுவது முக்கியம்.