WhatsApp : இனி பாதுகாப்பு குறித்த பயமில்லை.. வாட்ஸ்அப்பில் வந்த அசத்தல் அம்சம்!

WhatsApp Advanced Chat Privacy | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது பல புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : இனி பாதுகாப்பு குறித்த பயமில்லை.. வாட்ஸ்அப்பில் வந்த அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Apr 2025 23:34 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிக்கு உலக அளவில் 3.5 பில்லியன் பயனர்கள் உள்ளனர். ஏற்கனவே இவ்வளவு பயனர்கள் உள்ள நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு வரும் புதிய பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது வாட்ஸ்அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான். உலக அளவில் ஏராளமான பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்ற செயலைகள் இருந்தாலும், சிறந்த பாதுகாப்பு அம்சம் உள்ளதால் வாட்ஸ்அப் செயலி அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலி மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அந்த நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க செய்யும் வகையில் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அப்டேட்டுகள் மற்றும் அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் ஒரு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தனி நபர் உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல் என இரண்டுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள பாதுகாப்பு அம்சம்