WhatsApp : வாட்ஸ்அப்பில் வரப்போகு அசத்தல் அம்சம்.. இனி பிடித்தவர்களின் ஸ்டேட்டஸ் மிஸ் ஆகாது!

New Feature in WahtsApp | மெட்டா பயனர்களுக்கு எளிமையான சேவையை வழங்கும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களின் ஸ்டேட்டஸ்களை மிஸ் செய்யாத வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் வரப்போகு அசத்தல் அம்சம்.. இனி பிடித்தவர்களின் ஸ்டேட்டஸ் மிஸ் ஆகாது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Oct 2025 18:49 PM

 IST

உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறுவது, ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் என பல அம்சங்கள் இதில் உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கு ஏறகனவே கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், மேலும் புதிய பயனர்களை ஈர்க்கும் வகையில், பயனர்களுக்கு எளிதாக சேவைகளை பெறும் வகையில் வழிவகை செய்யவும் மெட்டா பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதிய அம்சம் ஒன்று வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பில் ஏற்கனவே பல அட்டகாசமான அம்சங்கள் உள்ள நிலையில், மெட்டா மேலும் பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்டேட்டஸ் அம்சத்தில் முக்கிய அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் பிடித்தவர்கள் மற்றும் முக்கியமான நபர்களின் ஸ்டேட்டஸ்களை பயனர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்கம் : WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் புதிய அம்சங்கள்.. என்ன என்ன தெரியுமா?

ஸ்டேட்டஸில் வரப்போக்கும்  முக்கிய அம்சம்

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டால் அது சரியாக 24 மணி நேரத்திற்கு பிறகு மாயமாகிவிடும். எனவே, ஒருவரின் ஸ்டேட்டஸை 24 மணி நேரம் கழித்து பார்க்க முடியாது. சிலர் ஒரே நேரத்தில் பல ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியாது என்பதால் ஸ்டேட்டஸ் பார்ப்பதை தவிர்த்து விடுவர். இந்த நிலையில் தான் மெட்டா ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது பிடித்தவர்கள் மற்றும் முக்கியமான நபர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அலர்ட் (WhatsApp Status Alert) தான் அது.

இதையும் படிங்க : கூகுள் குரோமை பின்னுக்கு தள்ளிய சோஹோவின் உலா.. அப்படி என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது?

இந்த அம்சத்தின் கீழ் யாருடைய ஸ்டேட்டஸை பார்க்க விரும்புகிறோமோ அவர்களது பெயர்களை இணைத்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த நபர் ஸ்டேட்டஸ் பதிவிட்டால் அது குறித்த அறிவிப்பு வரும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் மற்றும் முக்கியமானவர்களின் ஸ்டேட்டஸை தவராமல் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.