தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!

Serious Effects Of Watching Reels | பெரும்பாலான மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது ரீல்ஸ் தான். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பலரும் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரீல்ஸ் பார்ப்பது குறித்து நரம்பியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட மோசமானது.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Apr 2026 23:03 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களை (Smartphone) வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும் அம்சமாக ரீல்ஸ் (Reels) உள்ளது. இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரீல்ஸ் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர். இந்த நிலையில் தான், அது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முழு நேரமும் ஸ்மார்ட்போன்களுக்குள் மூழ்கி கிடக்கும் மனிதர்கள்

ஸ்மார்ட்போன்களை அனைவரும் பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடகங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏராளமானவர்கள் தங்களது நாளை அதிக நேரம் சமூக ஊடகங்களில் கழிக்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட தளங்களில் இருக்கு குறுகிய வீடியோக்களுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் இந்த குறுகிய வீடியோக்களை பலரும் பார்க்கின்றனர். இதில் தான் மிகப்பெரிய சிக்கல்கள் ஒளிந்திருப்பதாக ஆய்வு கூறியுள்ளது.

இதையும் படிங்க : விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?

மதுவை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை கொடுக்கும்

இவ்வாறு பலரும் தங்களது வாழ்வில் பல மணி நேரம் தொடர்ந்து ரீல்ஸ்களை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து பல மணி நேரம் ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட 5 மடங்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என்று நரம்பியல் ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அது மிக கடுமையாக பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!

டோபமைன் அதிகமாக சுரப்பதால் மூளை எப்போதும் விரைவான தூண்டுதல்களை மட்டுமே விரும்ப பழக்கப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட உரையாடல்கள், படிப்பு, பொறுமை, போன்றவை தாங்க முடியாததாக மாறுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்