இனி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்யலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

Users Can Schedule Messages In WhatsApp | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்யும் அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வர உள்ளது.

இனி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்யலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Feb 2026 19:33 PM

 IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அதில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மெட்டா கையில் எடுத்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப்பில் பயனர்கள் குறுஞ்செய்தியை  ஸ்கெடியூல் (Schedule) செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த சிறப்பு அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வரும் ஸ்கெடியூல் ஆப்ஷன்

வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் மிக முக்கிய அம்சம் தான் குறுஞ்செய்தி அனுப்புவது. இந்த அம்சத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருக்கு வேண்டுமானாலும் உடனுக்கு உடன் தகவலை பரிமாறிக்கொள்ள முடியும். விரைவான தகவல் பரிமாற்றம் கிடைப்பதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், அலுவகங்கள் என பல இடங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மிக முக்கியமான இந்த அம்சத்தில் மேலும் ஒரு அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!

இனி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்யலாம்

  • இந்த ஸ்கெடியூல் அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்களது குறுஞ்செய்திகளை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஸ்கெடியூல் செய்யலாம்.
  • ஒருவர் தனது வாட்ஸ்அப் செயலியில் எத்தனை குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் செய்துள்ளார் என்பது திரையில் தோன்றும். அதன் மூலம் எத்தனை குறுஞ்செய்திகள் ஸ்கெடியூல் செய்யப்பட்டுள்ளது என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
  • ஸ்கெடியூல் செய்த குறுஞ்செய்தி அந்த நபருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக அதில் மாற்றங்கள் அல்லது டெலிட் செய்யும் வசதி உள்ளது.
  • அவ்வாறு டெலிட் செய்யப்படும் குறுஞ்செய்திகள் குறித்து அந்த நபருக்கு எந்த வித தகவலும் தெரிய வராது.

இதையும் படிங்க : ஆமை வேகத்தில் இருக்கும் குரோமை சூப்பர் ஃபாஸ்ட் ஆக மாற்றலாம்.. எப்படி?

இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த ஸ்கெடியூல் அம்சம் குழு மற்றும் தனிநபர் உரையாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!