UPI : வெறும் 10 நொடிகள் போது.. சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ.. என்ன என்ன மாற்றங்கள்?

UPI Speed Boost | இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கான கால அளவை குறைத்துள்ளது.

UPI : வெறும் 10 நொடிகள் போது.. சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ.. என்ன என்ன மாற்றங்கள்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Jun 2025 12:56 PM

இந்தியாவில் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் (Technology Development) காரணமாக, பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்தியாவை பொறுத்தவரை கடைக்கோடி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த யுபிஐ செயலிகளை பயன்படுத்தி, நொடி பொழுதில் பண பரிமாற்றம் (Money Transaction) செய்ய முடியும் என்பதால் பொது மக்களுக்கு இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பண பரிமாற்றம் முதல் இருப்பு சோதனை வரை – யுபிஐ-ன் நேரத்தை குறைத்த என்சிபிஐ

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ சேவைகளின் கால அளவீட்டை குறைத்துள்ளது. பயனர்கள் விரைவாகவும், எளிதாகவும் சேவைகளை பயன்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த சேவைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நேர அளவீடு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ-ல் அதிரடி மாற்றம் செய்த என்சிபிஐ

பண பரிவர்த்தனை

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான நேரம் வெறும் 15 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பணம் அனுப்புவது, பெறுவது ஆகியவற்றுக்கு 30 விநாடிகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனை செக் செய்வது

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்த பிறகு அந்த பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸை (Transaction Status) செக் செய்வதற்கான நேரம் வெறும் 10 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சேவைக்கு 30 விநாடிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வெறும் 10 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

பணம் வங்கி கணக்கில் வருவது

யுபிஐ மூலம் ஒருவர் பணம் அனுப்பினால் அது பெறுநரின் வங்கி கணக்கிற்கு செல்லும் நேரம் வெறும் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு 30 நொடிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வெறும் 10 நொடிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் நம்பர் அல்லாத பரிவர்த்தனைகள்

யுபிஐ மூலம் மொபைல் எண் அல்லாமல் வங்கி கணக்கு எண் , ஐஎஃப்எஸ்சி கோட் ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளின் கால அளவீடு 15 நொடிகளாக இருந்தது. தற்போது அது வெறும் 10 நொடிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுபிஐ சேவைகளுக்கான நேரம் குறைப்பு ஜூன் 16, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 1, 2025 முதல் மேலும் சில புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.