கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறீங்களா? பயனுள்ள 10 கீபோர்டு ஷார்ட்கட் இதோ!
Must-Know Keyboard Shortcuts : சில ஷார்ட்கட் கீ மூலம் உங்கள் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்பாட்டை வேகமாகவும் சுலபமாகவும் மாற்றலாம். இவை உங்கள் தினசரி டிஜிட்டல் அனுபவத்தை பலமடங்கு மேம்படுத்தும். இதன் மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்க, ஹேங் ஆன செயலிகளை மூட, எமோஜி சேர்க்க போன்ற பல வேளைகள் எளிமையாக மாறும்.

மாதிரி புகைப்படம்
இப்போது எல்லா வீடுகளிலும் ஒருவருக்கு லேப்டாப் (Laptop) அல்லது கம்ப்யூட்டர் (Computer) இருக்கிறது. அது அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. பலர் கம்ப்யூட்டரில் தான் வேலையே செய்கிறார்கள். சில நேரங்களில் கம்ப்யூட்டரில் எளிதாக செய்யக்கூடிய ஒரு செயலை கூட மவுஸ் பயன்படுத்தி சுற்றிக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறோம். விண்டோஸில் (Windows) நம் வேலையை எளிமையாக்க சில சில முக்கியமான கீபோர்ட் ஷார்ட்கட் கீக்கள் இருக்கின்றன. அவை உங்களது வேலையை எளிமையாக்கி நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. அதில் முக்கியமான 10 கீபோர்ட் ஷார்ட்கட் கீக்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
1. ஸ்கீரன்ஷாட் எடுக்க – Windows Key + Shift + S
Windows Key + Shift +S என்ற கீயை அழுத்தும்போது அழுத்தும்போது ஸ்னிப்பிங் டூல் ஓபனாகும். இதில் உங்கள் டிஸ்பிளேவில் உள்ள பகுதியை தேர்வு செய்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். வேணுமென்றால் பின்பு அதை சேமிக்கவும் முடியும்.
2. உடனடியாக டெஸ்க்டாப் செல்ல – Windows Key + D
நீங்கள் வேகமாக டெஸ்க்டாப் செல்ல வேண்டுமா? Windows Key + D என்ற கீயை அழுத்தினால் உடனடியாக டெஸ்க்டாப் செல்ல முடியும். மீண்டும் ஒருமுறை அழுத்தினால் நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த விண்டோ ஓபனாகும்.
3. Task Manager உடனடியாக திறக்க – Ctrl + Shift + Esc
நாம் வேலை செய்துகொண்டிருக்கும் போது கம்ப்யூட்டர் ஹேங் ஆகிவிட்டால், Ctrl + Shift + Esc என்ற கீயை அழுத்தினால் டாஸ்க் மேனேஜர் செல்லும். இதன் மூலம் அந்த பகுதியை மட்டும் குளோஸ் செய்யலாம்.
4. விண்டோஸ் கோபைலட்டிற்கு செல்ல – Windows Key + C
கோபைடல் (Copilot) என்ற ஒரு புதிய AI அம்சம் விண்டோஸில் அறிமுகமாகியுள்ளது. இதை விரைவாக ஓபன் செய்ய Windows Key + C என்ற கீயை அழுத்தவும்.
5. வேறு பிரௌசர் டேபிற்கு மாற – Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab
பிரௌசரில் பல டேப்களை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது ஒன்றில் இருந்து மற்றொரு டேபிற்கு செல்ல Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab என்பதை அழுத்தவும்.
6. ரீசைக்கிள் பின் போகாமல் நேரடியாக டெலிட் செய்ய – Shift + Delete
Shift + Delete என்ற ஷார்கட் கீ மூலம் நேரடியாக ஃபைல்களை டெலிட் செய்யலாம். இது பயனர் விரும்பாத பைல்களை நேரடியாக நிரந்தரமாக அழிக்க உதவுகிறது. கவனமாக பயன்படுத்த வேண்டிய ஷார்ட்கட்.
7. கடந்த செயலை ரத்து செய்ய – Ctrl + Z
ஒரு வேலையை தவறாக செய்தால் அதனை முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல (Undo) மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல Ctrl + Z என்ற இந்த கீ பயன்படுத்தப்படுகிறது.
8. கம்ப்யூட்டரை உடனடியாக லாக் செய்ய – Windows Key + L
வீடு, அலுவலகம் எங்காக இருந்தாலும் கம்ப்யூட்டரை தற்காலிகமாகவும் உடனடியாகவும் லாக் செய்ய Windows Key + L பயன்படுத்தலாம்.
9. எமோஜி மெனுவை திறக்க – Windows Key + . (dot)
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற இடங்களில் எமோஜி சேர்க்க விரும்பினால், Windows Key + .(Dot) என்ற ஷார்ட் கட் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
10. அனைத்து விண்டோஸ்களையும் ஒரே நேரத்தில் காண – Windows Key + Tab
நமது கம்ப்யூட்டரில் அனைத்து விண்டோஸ்களையும் ஒரே நேரத்தில் பார்க்க Windows Key + Tab என்பதை கிளிக் செய்யலாம். இதன் மூலம் விண்டோஸ் டாஸ்க் வியூவில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து விண்டோஸ்களையும் பார்க்கலாம்.