அலுமினியம் தாளால் வைஃபை வேகம் அதிகரிக்குமா? உண்மை என்ன?
Truth Behind Wi-Fi Trick : அலுமினியம் தாள் வைஃபை வேகத்தை அதிகரிக்கும் என்று வைரலாகும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த பதிவு, ரூட்டரை மூன்று பக்கங்களிலும் அலுமினியம் ஃபாயில் வைத்து சிக்னலை ஒரே திசையில் செலுத்துவதால், இணைய வேகம் அதிகரிக்கலாம் எனக் கூறுகிறது. அதன் உண்மை தன்மை குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், ஒருவருக்கு போன் (Smartphone) தான் உயிர் என்றால், இண்டர்நெட் (Internet) தான் ஆன்மா. இவை இரண்டும் இல்லாமல் ஒருவேளையும் செய்ய முடியாது. அனைத்து வேலைகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் சார்ந்தே இருக்கிறது. அதற்கு இண்டர்நெட் வேகமும் மிக முக்கியமானது. இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க மக்கள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் (Social Media) ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் வீட்டில் வைஃபை ரூட்டரின் வேகத்தை எளிதாக அதிகரிக்கக்கூடிய ஒரு தீர்வு விளக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் பலனளிக்குமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு, நெட்டிசன்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. “அலுமினியம் ஃபாயில்” என்ற சாதாரணமாக ஹோட்டலில் பார்சலுக்கு பயன்படுத்தும் பொருள் மூலம், உங்கள் வைஃபை வேகத்தை அதிகரிக்கலாம் என வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், வைஃபை ரூட்டரை மூன்று பக்கங்களில் அலுமினியம் தாளால் மூடி, அதன் வேகம் அதிகரிப்பது போல காட்டப்பட்டுள்ளது. இந்த பதிவை @kirawontmiss என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்ததுடன், “இது உண்மையா?” எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதுவரை இந்த வீடியோவை 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க: போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
அலுமனிய தாள் வைத்தால் நெட் வேகம் அதிகரிப்பதாக கூறும் எக்ஸ் பதிவு
tf does this even do??? pic.twitter.com/u3q1ISjzZg
— kira 👾 (@kirawontmiss) July 9, 2025
இந்த யுக்தி உண்மையில் வேலை செய்கின்றதா?
இது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இது முழுமையாக உண்மை அல்ல. ரூட்டருக்கு சிக்னல் நான்கு புறமும் பரவ வேண்டும். ஆனால் அலுமினியம் தாள் வைப்பது ஒரு திசையில் மட்டும் சிக்னலை செலுத்தும். இதனால் சில இடங்களில் வேகம் கூடலாம், ஆனால் மற்ற இடங்களில் சிக்னல் கிடைக்கவே முடியாமல் போகும்.
இதையும் படிக்க: போன் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா? அப்போ இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!
நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த நிலையில் அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் நான் முயற்சித்தேன். எனக்கு சரியாக வேலை செய்கிறது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் இது எல்லாம் வேலை செய்யாது. இது போலியான வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக ரேடியோ அலைகள் அலுமினியத்திலிருந்து பிரதிபலிக்கிறது. அதனால் சில சமயங்களில் வேகம் கூடுவது போல தோன்றலாம். ஆனால் இது தொடர்ந்து வேலை செய்யாது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான தீர்வு என்ன?
உங்கள் வைஃபை வேகம் குறைவாக இருக்கிறதா என்றால், ரூட்டரின் இடத்தை மாற்றுவது, சிக்னல் தடைபடாத உயரமான இடத்தில் வைப்பது, அல்லது சிறந்த பிளான் தேர்ந்தெடுப்பது போன்ற வழிகள் தான் நம்பகமானவை. இல்லையென்றால் தொழில்நுட்ப ரீதியான பிரச்னை இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணு உதவி கேட்கலாம்.