ஸ்மார்ட்போன் சார்ஜ் வேகமாக காலியாகுதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

Smartphone Battery Tips: ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வேலைகளை மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. ஆனால் அதன் முக்கிய பிரச்னை ஸ்மார்ட்போன் பேட்டரில் விரைவாக காலியாவது தான். இதன் காரணமாக சிலர் அடிக்கடி புதுபோன் வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் சார்ஜ் வேகமாக காலியாகுதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

20 Aug 2025 17:44 PM

நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட அது உலகையே உள்ளங்கைக்கு கொண்டு வந்து விடுகிறது. மிகவும் அடிப்படை தேவைகளில் ஒன்றான ஸ்மார்ட்போன் காரணமாக ஒருவரை தொடர்புகொள்ள முடிவது முதல் யுபிஐ (UPI) மூலம்  பணம் அனுப்புவது வரை  நம் பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய பிரச்னை அதன் சார்ஜ் விரைவாக காலியாவது தான். குறிப்பாக வீட்டிற்கு வெளியே இருக்கும் தருணங்களில் நம் மொபைல் போனின் சார்ஜ் விரைவில் காலியாவதால் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்னை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பேட்டரியின் ஆயுள் எவ்வளவு?

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம் – அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.  இந்த பேட்டரிகள் சராசரியாக ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடங்கள் வரை நிலைத்திருக்கும். அதன் பிறகு பிரச்னை ஏற்படத் தொடங்குகிறது. அதாவது நாம் எவ்வளவு முறை பேட்டரியை சார்ஜ் செய்கிறோம் என்பதை பொறுத்து அதன் ஆயுள் இருக்கும். சராசரியாக மொபைல்போன் பேட்டரிகள் 500 சார்ஜ் சைக்கிள்கள் வரை சரியாக இயங்கும் ஒரு சார்ஜ் சைக்கிள் என்பது ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவதிகிம் வரை சார்ஜ் செயவது. போன் மற்றும் லேப்டாபை அதிகமாக சார்ஜ் செய்யும்போது அதில் உள்ள பேட்டரியின் ஆயுள் குறைகிறது.

இதையும் படிக்க : இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

பேட்டரி  ஏன் விரைவாக பழுதடைகிறது?

நாம் ஒவ்வொருமுறையும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது பேட்டரியில் கெமிக்கல் ரியாக்சன்கள் நடைபெறுகிறது. இதனால் பேட்டரி விரைவில் பழுதடைகிறது. ஸ்மார்ட்போனை சரியான அளவில் சார்ஜ் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன் சார்ஜ் முழுமையாக காலியாகும் வரை அதனை பயன்படுத்தக் கூடாது. அதே நேரம் 100 சதவகிதிம் வரை சார்ஜ் செய்யக் கூடாது. பொதுவாக 80 முதல் 90 சதவிகிதம் வரை சார்ஜ் செய்தால் போதுமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க : அதிக வெப்பம் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பேட்டரியின் ஆயுள் நீடிக்க செய்ய வேண்டியவை

  • நிபுணர்கள் குழு பரிந்துரைப்பது படி, பேட்டரியின் சார்ஜ் 20 சதவிகிதத்திற்கு கீழ் குறையக் கூடாது. அதே நேரம் 80 சதவகிதம் வரை சார்ஜ் செய்தால் போதுமானது.
  • போன் அதிகம் வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நிறைய செயலிகள் இயங்கினால் அதனை நிறுத்தவும். இதனால் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்.
  • போனுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும்.
  • ஸ்கிரீன் பிரைட்னஸை குறைக்கவும். அது அதிகமாக இருந்தால் சார்ஜ் மிக விரைவாக குறையும்.
  • தேவையில்லாத நேரங்ககளில் ப்ளூடூத், லொகேஷ் போன்ற வசதிகளை ஆஃப் செய்யவும்.