Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Smart Rings Benefits | ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகள் பயன்பாட்டில் உள்ளதை போலவே தற்போது ஸ்மார்ட் ரிங்குகளும் அறிமுகமாகியுள்ளன. இந்த ரிங்குகள் மூலம் ஒருவரின் உடல்நலம், மனநலம், இதய துடிப்பு உள்ளிட்ட தகவல்கள் மிக துல்லியமாக கண்காணிக்க முடியும்.

Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஸ்மார்ட் ரிங்

Updated On: 

19 Aug 2025 11:04 AM

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் (Technology Development) காரணமாக தற்போது அனைத்திற்கும் செயலிகள் மற்றும் கருவிகள் வந்துவிட்டன. அந்த வகையில், உடல்நலத்தை கண்காணிக்க சில செயலிகள் அறிமுகமாகின. பிறகு அந்த செயலிகள் டிஜிட்டல் வடிவம் பெற்றும் மொபைல் செயலிகளாக மாறின. பின்னர் அவை ஸ்மார்ட் வாட்சின் அம்சங்களாக மாறின. தற்போது இந்த அம்சங்கள் மேலும் வளர்ச்சி அடைந்து ஒரு ஒரே ஸ்மார்ட் மோதிரத்தில் (Smart Ring) அனைத்தும் அடங்கிவிட்டன. இந்த நிலையில், ஸ்மார்ட் மோதிரம் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட் மோதிரம் என்றால் என்ன?

ஸ்மார்ட் மோதிரம் என்பது மோதிர வடிவிலான ஒரு சிறிய மின்னணு கருவியாகும். ஸ்மார்ட் வாட்ச், பேண்டுகளை போலவே இந்த மோதிரத்திலும் பல்வேறு சென்சார்கள் பொருத்தட்டிருக்கும். இந்த ஸ்மார்ட் மோதிரத்தை ஒருவர் அணியும் பட்சத்தில் அவரது உடல்நலம் மற்றும் அன்றாட செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இந்த ஸ்மார்ட் மோதிரம் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ள நிலையில், இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையானதாக இருக்கும்.

இதையும் படிங்க : வீட்டில் வைஃபை ஸ்லோவாக இருக்கிறதா? இந்த எளிய மாற்றங்கள் செலவை குறைக்கும்

உடல்நிலை கண்காணிப்பு

இந்த ஸ்மார்ட் ரிங் ஒருவரின் இதய துடிப்பு, தூக்க முறை, வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு மற்றும் மன  அழுத்தம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை துல்லியமாக கணிக்கும். எப்போதுமே மருத்துவரிடம் சென்று அறிவுரை பெற முடியாத நிலையில்,  இந்த ஸ்மார்ட் ரிங் ஒரு தனிப்பட்ட உடல்நல ஆலோசகரை போல பணியாற்றும்.

செயல்பாடு கண்காணிப்பு

இந்த ஸ்மார்ட் ரிங் ஒருவரின் அன்றையா நாளுக்கான அனைத்து செயல்பாட்டையும் கண்காணிக்கும். உதாரணமாக ஒருவர் எத்தனை கிலோ மீட்டர் நடக்கிறார், எத்தனை அடிகளை எடுத்து வைத்துள்ளார், அதன் மூலம் அவரது உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துவிடும். இது அன்றாட உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : சாட்ஜிபிடி டயட் டிப்ஸ் பின்பற்றிய முதியவருக்கு ஷாக்.. 19வது நூற்றாண்டு நோயால் பாதிப்பு!

அறிவிப்புகள்

ஸ்மார்ட்போன்களில் அறிவிப்புகள் வருவதை போலவே இந்த ஸ்மார்ட் ரிங்கிலும் அறிவிப்புகள், அழைப்புகள், குறுஞ்செய்தி ஆகியவை வரும். இந்த ஸ்மார்ட் ரிங்கில் திரை இல்லாததால், அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் சிறிய அதிர்வுகள் அல்லது சிறிய LED (Light Emitting Diode) ஆகியவை மூலம் தோன்றும். இதன் மூலம் முழு நேரமும் தகவல்களுக்காக ஸ்மார்ட்போனை பார்த்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது.