சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை குறைத்த நிறுவனம்!
Price Dropped For Samsung Galaxy S25 Ultra Smartphones | சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா
இந்தியா சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமாக சாம்சங் (Samsung) உள்ளது. ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பொதுமக்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இந்த சாம்சங் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு (Samsung Galaxy S25 Ultra Smartphone) 20,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான விலையை குறைத்துள்ளது. இந்த சீரீஸில் மற்ற மாடல்களை விடவும் பேஸ் மாடல்களின் விலை கனிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.1,29,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!
அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.1,41,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.1,69,999-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : கெஸ்ட் சாட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப், 12ஜிபி ரேம், 5,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 8கே தரத்தில் வீடியோ பதிவு செய்வதற்காக இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு டெலிபோட்டோ லென்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் AMOLED QHD+ ஸ்கீரீன் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைத்தவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.