உங்க போனின் டயலர் ஸ்கிரீன் திடீரென மாறிடுச்சா? இது தான் காரணம்!
UI Change Alert : ஆண்ட்ராய்டு போன்களில் டயலர் ஸ்கிரீனில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. எதனால் இந்த மாற்றம், பழைய ஸ்கிரீனை மீண்டும் பெறுவது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கடந்த சில நாட்களில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் டயலர் ஸ்கிரீன் திடீரென மாறியது பலருக்கு ஆச்சரியமளித்தது. இதுவரை போன் வந்தால், மேலும் கீழுமாக ஸ்வைப் செய்யும் முறை இருந்தது. இந்த நிலையில் திடீரென இடது, வலது புறமாக ஸ்வைப் செய்யும் முறை அப்டேட்டாகியிருக்கிறது. இது எந்த வித அப்டேட்டும் இல்லாமல் நடந்தததால் பலருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியமும் ஏற்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவேளை யாராவது தங்கள் போனை ஹேக் செய்துவிட்டதாக நினைத்ததாக கமெண்ட் செய்துள்ளனர். பெரும்பாலான நபர்கள் கூகுளின் (Google) போன் ஆப்பை தான் தான் பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் கூகுகள் தனது போன் ஆப்பில் Material 3 Expressive Redesign அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுளின் போன் ஆப்பில் ஏற்பட்ட மாற்றம்
நம்மில் பலரும் ஸ்மார்ட்போனில் கூகுளின் போன் ஆப்பைத் தான் பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் கூகுகள் தனது போன் ஆப்பில் சில அப்டேட்டுகளை வழங்கியுள்ளது. இந்த அப்டேட்டுகள் மக்களுக்கு பயன்படுத்த எளிதாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுகள் போன் ஆப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்ள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிக்க : வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?
- ஹோம் டேபில் முன்பு தனித்தனியாக இருந்த ஃபேவரைட்ஸ் மற்றும் ரீசண்ட் என்ற ஆப்சன் இப்போது ஒன்றாக, சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் Call History மற்றும் அதிகம் தொடர்புகொள்ளும் காண்டாக்ட்ஸ் தற்போது carousel வடிவில் காட்ட்படுகிறது.
- கீபேட் டிசைன் ஆனது முன்பிருந்து Floating Keypad Button ஸ்டைல் நீக்கப்ப்டடு, புதிய டேப் வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேடல் பகுதியில் காண்டாக்ட்ஸ், செட்டிங்ஸ், கால் ஹிஸ்டரி, மற்றும் ஹெல்ப் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
- வரும் அழைப்புகளை மேல் நோக்கி ஸ்வைப் செய்யும் வசதிகளுக்கு பதிலாக ஒரே தொடுதலில் ஏற்கவோ அல்லது கட் செய்யவோ முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!
பழைய அமைப்பை எப்படி தேர்ந்தெடுப்பது?
பலருக்கும் இந்த புதிய டிசைன் பிடிக்குமா என தெரியாது. இது வேண்டாம் பழைய டிசைன் தான் உங்களுக்கு பிடிக்கும் என்றால், அதற்கு வழி உள்ளது. நீங்கள் பழைய டிசைனை திரும்ப பெற விரும்பினால் APP Settings-ல் இருந்து Update-ஐ Uninstall செய்வதன் மூலம் நீக்கலாம். இது பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த புதிய மாற்றம் தொடர்பாக கலவையான எதிர்வினைகளை பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புதிய டிசைனை வரவேற்கும் நிலையில், பலர் தங்களுக்கு பழைய ஸ்டைல் தான் பிடித்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் அப்டே்டை Uninstall செய்வதன் மூலம் பழைய டிசைனை பெறலாம் என்பது இதில் கவனிக்கத்தக்க ஒன்று.