அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ 15 சி!

Oppo Reno 15 C Smartphone Launched In India | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஓப்போ ரெனோ 15 சி ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ 15 சி!

ஓப்போ ரெனோ 15 சி

Updated On: 

06 Feb 2026 14:33 PM

 IST

இந்திய மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாகவும், அதிக பயனர்களை கொண்ட நிறுவனமாகவும் ஓப்போ (Oppo) உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனை (Oppo Reno 15C Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ 15 சி

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 15 சீரீஸில் ஒன்றாக அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக் அப் திறன், மெல்லிய வடிவமைப்பு, கேமரா ஆகியவை பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பிப்ரவரியில் அறிமுகமாக வரிசைக் கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

ஓப்போ ரெனோ 15 சி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • இந்த ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50 + 8+ 2 மேகாபிக்சல் கொண்ட மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.
  • இந்த ஸ்மார்ட்போனின் செஃல்பி கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
  • இந்த போனில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக உள்ளது தான் பேட்டரி. காரணம், இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது.

இதையும் படிங்க : கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!

 விலை மற்றும் இதர அம்சங்கள்

  • இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் ஆகிய வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இந்த ஓப்போ ரெனோ 15 சி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.34,999 ஆக உள்ளது.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்