இனி வேலை ஈஸியா கிடைக்கும்… ஏஐ வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்
AI Jobs Platform : உலக அளவில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஏஐ இல்லாத துறைகளே இல்லை எனலாம். அந்த வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் ஏஐ வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கவுள்ளது. இது லிங்கிட்இன் தளத்துக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஓபன் ஏஐ நிறுவனம் மிகப்பெரிய முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளது. அதன் படி வேலைவாய்ப்பு தளம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள ஏஐ திறன்களை வெளிப்படுத்தி சான்றிதழ்கள் மூலம் தகுதியை நிரூபிக்க முடியும். பின்னர். அந்த திறன்களுக்கு ஏற்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படும். இது வேலைவாய்ப்பு துறையில் பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது.
புதிய வேலைவாய்ப்பு தளம்
சாட்ஜிபிடி மூலம் ஏஐ உலகில் பெரும் புரட்சி ஏற்படுத்தியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம், அடுத்து வருகிற 2026 ஆண்டு ஏஐ வேலைவாய்ப்பு தளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது சாதாரண வேலைவாய்ப்பு இணையதளங்களைப் போல அல்லாமல், இதில் விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள ஏஐ திறன்களை வெளிப்படுத்தி சான்றிதழ்கள் பெற முடியும். இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள சான்றிதழ்களுக்கு ஏற்ப, நிறுவனங்களுடன் நேரடியாக வேலைக்காக பரிந்துரைக்கப்படும். இதன் மூலம் லிங்கிட்இன் போன்ற வேலைவாய்ப்பு தளங்களுக்கு ஓபன்ஏஐ வலுவான போட்டியாக மாற வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : வெறும் 15 விநாடிகளில் ஆபத்தான இதய நோய்களைக் கண்டறியும் ஏஐ ஸ்டெதஸ்கோப் – எப்படி செயல்படுகிறது?
ஏஐ சான்றிதழ் திட்டம்
ஓபன் ஏஐ வேலை தேடுபவர்களுக்கு ஏஐ சான்றிதழ் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்களில் ஏஐ எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நடைமுறை அறிவுடன் கற்றுத்தரும் ஒரு திட்டமாகும். இது வேலை வழங்கும் நிறுவனங்களால் அங்கீகரிக்கும். தற்போது 2030 ஆம் ஆண்டிற்குள் 1 கோடி அமெரிக்கர்களுக்கு சான்றிதழ் வழங்குவதே இதன் நீண்டகால நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஏஐ கல்வி தொடர்பாக கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்டமேன் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க : நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?
வால்மார்ட் நிறுவனத்துக்கு ஏஐ பயிற்சி
ஓபன் ஏஐயின் ஏஐ சான்றிதழ் திட்டத்தில் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் இணைந்து செயல்படவுள்ளது. வால்மார்ட் தனது 16 லட்சம் பணியாளர்களுக்கு இலவசமாக ஏஐ பயிற்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வால்மார்ட் பணியாளர் அட்டவணை, ஷேர் மேனேஜ்மென்ட், சப்ளை செயின் போன்ற துறைகளில் ஏஐ பயன்படுத்தி வருகிறது. கூடுதலாக தற்போது வாடிக்கையாளர் சேவையிலும் அதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.